தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவராத்திரி தலங்கள்

Go down

சிவராத்திரி தலங்கள் Empty சிவராத்திரி தலங்கள்

Post  birundha Fri Mar 29, 2013 9:29 pm

சிவராத்திரி தினத்தன்று அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று தரிசிப்பது நல்லது. அப்பொழுது சிவபெருமானுடைய நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவது சிறந்தது. சிவராத்திரியோடு தொடர்புடைய தலங்கள் பல உள்ளன. வசதி படைத்தோர் கீழ்க்கண்ட தலங்களுக்கு சென்று வழிபட்டால் மேலும் மேலும் தம் வாழ்க்கையில் உயர்வார்கள் என்பது முக்காலமும் உண்மை.

1. திருவைகாவூர்:- தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருவைகாவூரில் எழுந்தருளி உள்ளவர் வில்வனேஸ்வரர் இறைவி சர்வ ஜனரட்சகி. இத்தலத்தைச் சம்பந்தர், நாவுக்கரசர், அருணகிரியார், வள்ளலார் ஆகியோர் பாடியுள்ளனர்.

2. திருவண்ணாமலை:- பிரமனும் திருமாலும் சிவபெருமான் நெருப்புருவில் நின்றபோது முடி, அடி தேடித் தோல்வி அடைந்து சிவபெருமானை வணங்கிய தலம் திருஅண்ணாமலை. வணங்கிப் போற்றிய இருவருக்கும் காட்சி தந்தது சிவ ராத்திரி அன்றே ஆகும்.

3. திருக்கடவூர்:- காலனை காலால் உதைத்த ஊர் திருக்கடவூர். மார்க்கண்டேயன் சிவனைச் சிவராத்திரி அன்று பூசித்துக் கொண்டிருந்தபோது எமன் வந்து பாசக் கயிற்றை வீச லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான் தன் காலால் எமனை உதைத்தார். அத்தலம் தான் திருக்கடவூர். எமன் பூசித்த தலம். அருளாளர்களின் பாடல் பெற்ற தலம். இத்தலத்தைத் தரிசித்தால் எமவாதம் நீங்கும்.

4. காஞ்சீபுரம்:- பார்வதி தேவியார் விளையாட்டாக சிவபெருமானின் கண்களைப் பொத்தியதால் சிவபெருமானால் சாபம் பெற்று தவம் முழுமை அடையாததால் திருவண்ணாமலையில் தவம் செய்து இடப்பாகம் பெற்றார். இவ்வரலாற்றை காஞ்சிபுராணம் மிக விரிவாகக் கூறுகிறது. இந்நிகழ்வு சிவராத்திரி அன்று நடந்தது. காஞ்சியின் ஒரு பகுதி உருத்திரச் சோலை எனப்பட்டதாகவும் காஞ்சிபுராணம் கூறுகிறது. காஞ்சியில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரரைச் சிவராத்திரி அன்று வழிபட்டு அருளை பெறுவோமாக.

5. ஸ்ரீசைலம்:- சிவ மகா புராணத்தில் கூறப்பட்ட வேடன் கதை நடந்த இடம் ஸ்ரீசைலம் ஆகும். இங்கே நந்திதேவர் மலை உருவில் வீற்றிருக்கின்றார். காஞ்சியில் மர உருவிலும் திருவண்ணாமலையில் மலை உருவிலும் சிவபெருமான் எழுந்தருளி இருப்பது போல ஸ்ரீசைலத்தில் மலை உருவில் நந்திதேவர் எழுந் தருளியுள்ளார். இத்தலத்தை திருப்பருப்பதம் என்றும் மல்லிகார்ஜூனம் என்றும் சொல்வார்கள். இது 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்று. சிவராத்தி யன்று இங்குள்ள பாதாளகங்கை என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனைத் தரிசித்தால் எல்லா நலன்களும் பெற்று இன்பம் அடையலாம்.

6. ஓமாம்புலியூர்:- சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்த தலம் ஓமாம்புலியூராகும். சிவமகா புராணத்தில் சொல்லப்பட்ட வேடன் கதை போன்ற ஒரு கதை இங்கும் உண்டு. சிவராத்திரியின் பெருமையை விளக்குகிறது. இந்த ஊரினை பிரணவ வியாக்ரபுரம் என்றும் கூறுவர். சிதம்பரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது.

7. திருக்கழுக்குன்றம்:- செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஊர் திருக்கழுக்குன்றமாகும். இவ்வூரை உருத்திரகோடி என்பார்கள். கோடி உருத்திரர்கள் சிவராத்திரி அன்று சிவபூஜை செய்து அருள் பெற்றதால் இது உருத்திரகோடி எனப் பெயர் பெற்றதாம். இக்கோவிலில் சிவராத்திரி தினத்தன்று பூஜை செய்தால் கோடிருந்திரர்கள் பெற்ற அருள் நமக்கு கிடைக்கும்.

8. திருக்காளத்தி:- இங்குள்ள மலைக் கோவிலில் சிவராத்திரி நாளில் தேரில் காளத்திநாதர் பவனி வருகிறார். தேரோட்டம் திருக்கல்யாணம், கிரிவலம், ரிஷப வாகன சேவை முதலிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோகர்ணம், தேவிகாபுரம் ஆகிய சிவத்தலங்களிலும் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum