தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘கடல்’ படத்தில் நடிக்கும் கார்த்திக், ராதா மகன் – மகள் படங்கள்: மணிரத்னம் வெளியிட்டார்

Go down

‘கடல்’ படத்தில் நடிக்கும் கார்த்திக், ராதா மகன் – மகள் படங்கள்: மணிரத்னம் வெளியிட்டார் Empty ‘கடல்’ படத்தில் நடிக்கும் கார்த்திக், ராதா மகன் – மகள் படங்கள்: மணிரத்னம் வெளியிட்டார்

Post  ishwarya Fri Mar 29, 2013 4:52 pm

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் ஒன்றாக அறிமுகமான பழைய நடிகர் கார்த்திக் மகன் கவுதமும், நடிகை ராதா மகள் துளசியும், மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடலோர பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்தது.
கவுதம், துளசி படங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ரகசியமாக படப்பிடிப்பு நடந்து வந்தது.

இருவரின் படங்களையும் பத்திரிகைகளில் வெளியிடக்கூடாது என்று மணிரத்னம் கண்டிப்பாக கூறினார். இதனால் இருவரும் போட்டோகிராபர்களிடம் முகத்தை காட்டுவதை தவிர்த்தனர். போனில் மட்டுமே பேட்டி அளித்து வந்தார்கள்.

இந்த நிலையில் ‘கடல்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை வருகிற 17-ந் தேதி நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இவ்விழாவில் கவுதம், துளசி பங்கேற்க உள்ளனர். இதையடுத்து இருவரின் படங்களையும் மணிரத்னம் தற்போது முதல் தடவையாக வெளியிட்டு உள்ளார். ‘கடல்’ படத்தில் அர்ஜுன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum