தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீசுதர்சன அஷ்டகம்

Go down

ஸ்ரீசுதர்சன அஷ்டகம் Empty ஸ்ரீசுதர்சன அஷ்டகம்

Post  meenu Thu Mar 28, 2013 5:06 pm


உலகினில் இன்பம் உயர்வுறு வாழ்வும் உண்மையும் தந்திடுவான்
லலிடும் ஒளியாய் நித்நிதிய நித்யாய் நின்றவன் நிறைந்திடுவான் நலங்களே தந்து நன்மைகள் பெய்த குலங்களை காத்திடுவான்
பலமிகு தேவா பண்டிததேவா சுதர்ஸனா சுதர்ஸனா!
நாரணன் வலக்கரம் நாடிய தேவன் நாற்றிசை காத்திடுவான்
ஆரணம் பாடிடும் ஆண்டவன் அடியவர் ஆனந்தம் ஆகிடுவான்.
காரணம் ஆனான் காவலும் ஆனான் காலத்தை வென்றி டுவான்
பார்புகழ் தேவா பாவக தேவா சுதர்ஸனா சுதர்ஸனா!
சக்கரத்தாழ்வான் சங்கடம் தீர்ப்பான் சக்தியும் தந்திடு வான்
எக்கணம் நினைப்பினும் அக்கணம் வருவான் எங்கணும் நிறைந் திடுவான் செக்கரின் வானச் செந்தழல் முகத்தான் செபிப்பவர்க்கருளிடுவான்
பக்தரின் தேவா பலன்தரும் தேவா சுதர்ஸனா சுதர்ஸனா!
பிணிகளை வென்றிடும் பெருமருத்துவனே பிழைகளைப் பொறுத்திடுவாய்; அணியணியாகவே அமுதினைப் படைத்தோம் அய்யனே உண்டிடுவாய். மணிகளை முழக்கி மணங்களைப் பரப்பி மண்டல தீபமிட்டோம்.
கணிதனே தேவா கதிதரு தேவா சுதர்ஸனா சதர்ஸனா!
அருள் மனத்தவனே அரிசுரத்தவனே அருகினில் அமர்ந்திடுவாய் பொருளளித்திடுவாய் புகழளித்திடுவாய், பொன்னுடல் தந்திடுவாய். இருளொழித்தவனே இசையளித்தவனே இன்று நீ வந்திடுவாய்;
இருடியர் தேவா இலங்கிடு தேவா சுதர்ஸனா சுதர்ஸனா!
கவலைகள் தீரக் கனிவோடு வந்து கண்முன்னே நின்றிடுவாய்
அவலங்கள் பெருக்கும் அயர்வுகள் கூட்டும் அழிவினை அகற்றிடுவாய். தவமிகு தவனே தயை மிகுந்தவனே தளிரடி தந்திடுவாய்.
கவசநற் தேவா கனகனே தேவா சுதர்ஸனா சுதர்ஸனா.
வேண்டிய போதினில் வேகமாய் வருவாய் வேதனை போக்கிடுவாய். ஆண்டிட வேண்டி ஆர்வமாய் வந்தாய் ஆழியின் திருவடிவே.
தூண்டிட வேண்டா தூயநல் விளக்கே தூமணிக்குல மகனே:
காண்டிகர் தேவா கார்மழைத் தேவா சுதர்ஸனா சுதர்ஸனா!
ஜெய ஜெய அக்கினி தத்துவ பேனே ஜெய ஜெய சுதர்ஸனா.
ஜெய ஜெய கீர்த்தி மண்டலவாசனே ஜெய ஜெய சுதர்ஸனா.
ஜெய ஜெய மங்கள சட்கோண ரூபனே ஜெய ஜெய சுதர்ஸனா.
ஜெய ஜெய தேவா ஸ்ரீ ஜெய தேவா ஜெய ஜெய சசுதர்ஸனா. சுதர்ஸனா.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum