தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம்

Go down

விஸ்வரூபம்  Empty விஸ்வரூபம்

Post  meenu Thu Mar 28, 2013 11:54 am

நடிகர்கள்:
கமல்ஹாசன், பூஜாகுமார், ஆன்ட்ரியா.
இசை:
ஷங்கர் எஹ்சான் லாய்
ஒளிப்பதிவு:
சானுஜான் வர்கீஸ்.
இயக்கம்:
கமல்ஹாசன்.
தயாரிப்பு:
சந்திரஹாசன்–கமல்ஹாசன்.

கதையின் கரு: தீவிரவாதிகளை வேட்டையாடும் உளவுத்துறை அதிகாரி.

கதை, அமெரிக்காவில் தொடங்குகிறது. கமல்ஹாசன், கதக் நாட்டிய கலைஞர். அவருடைய மனைவி, பூஜாகுமார். கமல்ஹாசனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார். அதை கண்டுபிடிக்க துப்பறியும் நிபுணரை நியமிக்கிறார். அந்த துப்பறியும் நிபுணர், தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்கிறார். அவரை, தீவிரவாதிகள் கொன்று விடுகிறார்கள்.

துப்பறியும் நிபுணரின் டைரி மூலம் பூஜாகுமாரின் முகவரி கிடைக்கிறது. கமல்ஹாசனையும், பூஜாகுமாரையும் தீவிரவாதிகள் கடத்தி வந்து சித்ரவதை செய்கிறார்கள். ‘‘என்னை கொல்வதற்கு முன்பு பிரார்த்தனை செய்ய அனுமதியுங்கள்’’ என்று தீவிரவாதியிடம் கமல் கேட்க–கட்டப்பட்டிருந்த அவருடைய கைகளை அவிழ்த்து விடுகிறார்கள். கமல்ஹாசன் விஸ்வரூபம் எடுத்து, தீவிரவாதிகள் கும்பலை துவம்சம் செய்கிறார்.

‘பிளாஷ்பேக்’கில், கதை ஆப்கானிஸ்தான் பின்னணியில் பயணிக்கிறது. இந்திய உளவுத்துறை அதிகாரியான கமல்ஹாசன், தலீபான் தீவிரவாதி வேடத்தில் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து, அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது போல் நடித்து, அவர்களின் ரகசிய திட்டங்களை தெரிந்து கொள்கிறார். புறாக்களை அனுப்பி அமெரிக்காவையே அழிக்க முயற்சிக்கும் தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை கமல்ஹாசன் எப்படி முறியடிக்கிறார்? என்பது உச்சக்கட்ட காட்சி.

பெண்மைத்தனம் கலந்த கதக் கலைஞராக அறிமுகமாகும் கமல்ஹாசன், அட்டகாசம். அவருடைய நளினம் கலந்த ஆட்டமும், பெண்மை கலந்த நடையும், முக பாவனைகளும் தியேட்டரை அமர்க்களப்படுத்துகின்றன. தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்டு அடிவாங்கி அனுதாபம் சம்பாதிக்கும் அவர், திடீரென்று அதிரடி அவதாரம் எடுக்கும்போது, தனது அப்பாவி கணவரா இப்படி? என ஆச்சரியப்படும் பூஜாகுமாரைப்போல் படம் பார்ப்பவர்களுக்கும் எதிர்பாராத திருப்பம்.

அந்த சண்டை காட்சிக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம். அதை பூஜாகுமார் கற்பனை செய்து பார்ப்பது போல் இன்னொரு முறை காட்டியிருப்பது, ரசிகர்களுக்கு போனஸ்.

தலீபான் தீவிரவாதியை போன்ற கமல்ஹாசனின் ஒப்பனையும், ஆப்கானிஸ்தான் சம்பந்தப்பட்ட காட்சிகளும் மிரள வைக்கின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி வந்தபின், அழகான கமல்ஹாசனின் அதிரடி ஆட்டம் ஆரம்பிக்கிறது.

பூஜாகுமார், வசீகரமான முகம். கவர்ச்சியான தோற்றம். படத்தின் ஆரம்பத்தில் கணவர் பற்றி வெறுப்பாக பேசும் அவர், கணவரின் உண்மையான சுபாவம் புரிந்ததும் அவர் மீது காதல்வசப்பட்டு பேசும் இடங்கள், கவிதை.

ஆன்ட்ரியா படம் முழுக்க வந்தாலும், நடிப்பதற்கு அதிக சந்தர்ப்பம் இல்லை. படத்தில் இன்னொரு தெரிந்த முகம், நாசர். மற்ற நடிகர்கள் அனைவரும் அயல் முகங்கள். அதுவே கதாபாத்திரங்களுக்கும் ஜீவனாக அமைந்து இருக்கிறது.

இதுவரை எந்த படத்திலும் (ஆங்கில படங்களில் கூட) பார்த்திராத அமெரிக்காவை பார்த்த திருப்தி. அமெரிக்க நகரங்களின் அழகை அங்குலம் அங்குலமாக படம்பிடித்து இருக்கிறார், ஒளிப்பதிவாளர் சானுஜான் வர்கீஸ்.

ஷங்கர் எஹ்சான் லாய் இசையில், ‘‘உன்னைக் காணாது கண்’’ பாடல், சுகமான ராகம். பின்னணி இசையில், மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர். சண்டை காட்சிகளில், ஹாலிவுட் தரம்.

வசனம் அநேக இடங்களில், சிலேடையாக விளையாடி இருக்கிறது. ‘‘அப்பா இல்லாமல் வளர்ந்த பசங்க விவரமாக இருப்பாங்க’’ என்று உமர் சொல்ல–‘‘அப்பா யார் என்றே தெரியாமல் வளர்ந்த பசங்க, அதைவிட விவரமாக இருப்பாங்க’’ என்று கமல்ஹாசன் பதிலடி கொடுக்கும் இடமும், ‘‘கடவுள்தான் காப்பாத்தணும்’’ என்று பூஜாகுமார் சொல்ல–‘‘எந்த கடவுள்?’’ என்று கமல்ஹாசன் கேட்கும் இடமும் உதாரணங்கள்.

ஹாலிவுட் படங்களில் கூட பார்த்திராத பிரமாண்டங்களை வடிவமைத்த விதத்தில், டைரக்டர் கமல்ஹாசன் உச்சம் தொட்டு, ‘உலக நாயகன்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்.

படத்தின் முடிவில், ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்ற அறிவிப்பு, இன்ப அதிர்ச்சி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» விஸ்வரூபம்
» தொடங்கியது ‘ விஸ்வரூபம் ‘
» பிரெஞ்சில் விஸ்வரூபம்
» விஸ்வரூபம் தடை நீங்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum