தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘பரதேசி’ படத்தின் திருட்டு வி.சி.டி. விற்பனையை தடுக்க வேண்டும்: டைரக்டர் பாலா புகார்

Go down

‘பரதேசி’ படத்தின் திருட்டு வி.சி.டி. விற்பனையை தடுக்க வேண்டும்: டைரக்டர் பாலா புகார்  Empty ‘பரதேசி’ படத்தின் திருட்டு வி.சி.டி. விற்பனையை தடுக்க வேண்டும்: டைரக்டர் பாலா புகார்

Post  meenu Thu Mar 28, 2013 11:51 am

டைரக்டர் பாலாவின் பரதேசி படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை டைரக்டர் பாலா, சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–எனது டைரக்ஷனில் பரதேசி படம் வெளியாகி உள்ளது. அந்த படம் திரைக்கு வந்து 4 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் அந்த படத்தின் திருட்டு வி.சி.டி விற்பனை நடக்கிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனரை சந்தித்து முறையிட்டேன். அவர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக சொன்னார். தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நடவடிக்கைகளும் உடனடியாக தொடங்கப்பட்டு விட்டன.

கமல்ஹாசனுக்கு ஆதரவு

லண்டனில் இருந்து திருட்டு வி.சி.டி. தயாரித்து அனுப்பப்படுவதாக தெரிய வந்துள்ளது. படங்களின் வெளிநாட்டு உரிமை கொடுக்கப்படுவதால்தான், திருட்டு வி.சி.டி எளிதாக தயாரிக்கப்படுவதாக சொல்வது சரி அல்ல. வெளிநாட்டு உரிமை கொடுத்தால்தான் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வராது. வெளிநாட்டு உரிமை கொடுக்கப்படாவிட்டாலும், எப்படியாவது திருட்டு வி.சி.டி.யை தயாரித்து விடுவார்கள்.மேலும் டி.டி.எச். மூலம் படங்கள் திரையிடும் விஷயம் நல்ல விஷயம். அதில் கமல்சார் எடுத்த முடிவை நானும் ஆதரிக்கிறேன். எப்படியும் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் அந்த தொழில்நுட்பம் வந்து விடும்.இவ்வாறு பாலா தெரிவித்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum