தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திகில் படத்தில் ஸ்டாராகும் பவர் ஸ்டார்!

Go down

திகில் படத்தில் ஸ்டாராகும் பவர் ஸ்டார்! Empty திகில் படத்தில் ஸ்டாராகும் பவர் ஸ்டார்!

Post  ishwarya Wed Mar 27, 2013 2:29 pm

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு பூஜை போடுவதற்கு முன்பே, பவர் ஸ்டாருக்கு போன் செய்து விடுகிறார்கள். அவர் படத்தில் ஒரு காட்சியிலாவது தலை காட்டிவிட வேண்டும் என்று நம்புகிறார்கள். ஒரு பாடலுக்கு நடனமாடவும் அழைக்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது திகில் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அந்த படத்தின் பெயர் ‘காந்தாரி’. இப்படத்தின் நாயகனாக ‘சாட்டை’ யுவன், நாயகிகளாக இஷா, பிரதிக்ஷா ஆகியோர் நடிக்கின்றனர். எம்.கே.குமார் என்பவர் இயக்குகிறார்.

ஒரு வீட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் காதலர்கள் அந்த வீட்டில் உள்ள பேய்களால் படும் அவஸ்தைகளை கதையாக உருவாக்கியுள்ளார்கள். படத்தில் நடிகராக நடித்திருக்கும் பவர் ஸ்டார், அந்த வீட்டில் நடக்கும் படப்பிடிப்பின் போது அந்த பேயிடம் மாட்டிக் கொண்டு எப்படி திண்டாடுகிறார் என்பதுபோல இவரது காமெடி பகுதியை அமைத்துள்ளனர்.

இப்படத்தில் நடிப்பதற்காக பவர் ஸ்டார் 1 நாளைக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் என, 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum