தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓராண்டுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்ட

Go down

ஓராண்டுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்ட  Empty ஓராண்டுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்ட

Post  meenu Tue Mar 26, 2013 5:34 pm

தமிழக சட்டசபையில் இருந்து ஒரு வருடத்திற்கு சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர், வரும் ஜூலை மாதம் நடைபெறும் டெல்லி மேல்–சபை தேர்தலில் ஓட்டுப்போட முடியுமா? என்பது பற்றி இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்று தெரிகிறது.

டெல்லி மேல்–சபை தேர்தல்

கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின்போது ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையின் நடவடிக்கைகளில் இருந்து ஓராண்டுக்கு நீக்கி வைக்கப்படுகின்றனர் என்று சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள டெல்லி மேல்–சபை தேர்தலில் இந்த 6 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப்போட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லி மேல்–சபை எம்.பி.க்கள் கனிமொழி (தி.மு.க.), திருச்சி சிவா (தி.மு.க.), ஏ.இளவரசன் (அ.தி.மு.க.), வி.மைத்ரேயன் (அ.தி.மு.க.), பி.எஸ்.ஞானதேசிகன் (காங்கிரஸ்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24–ந் தேதியுடன் முடிவடைகிறது.

6 எம்.எல்.ஏ.க்கள் ஓராண்டுக்கு சஸ்பெண்டு

இந்த பதவி இடங்களுக்கான தேர்தல் அப்போது நடைபெறும். இந்த தேர்தலில் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட முடியுமா என்று தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தமிழக சட்டசபை தீர்மானம் பற்றி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவிப்பார் என்றும், அதன்பிறகு இந்திய தேர்தல் ஆணையம்தான் இதுகுறித்து முடிவு செய்து அதிகாரபூர்வமாக அறிவிக்கும்’’ என்று தெரிவித்தார்.

29 உறுப்பினர்கள் கொண்ட தே.மு.தி.க.வின் 6 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து ஓராண்டுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை தே.மு.தி.க. இழக்குமா? அல்லது இழக்காதா? என்பது பற்றி சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து சட்டசபை முறைப்படி அறிவிக்கும்’’ என்று சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பளம், சலுகைகள் கிடையாது

சட்டசபை நடவடிக்கைகளில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் ஓராண்டுக்கு நீக்கி வைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் சம்பளம், சலுகைகள் எதையும் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரபூர்வமாக ஒவ்வொரு மாதமும் சம்பளம், படிகள், சலுகைகள் என்னென்ன என்பது பற்றி தமிழக சட்டசபை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:–

படிகளுடன் மாத சம்பளம் ரூ.50 ஆயிரம்

* சம்பளம் – ரூ.8,000

* ஈட்டுப்படி – ரூ.7,000

* டெலிபோன் படி – ரூ.5,000

* தொகுப்பு படி – ரூ.2,500

* தொகுதி படி – ரூ.5,000

* தபால் படி – ரூ.2,500

* வாகனப்படி – ரூ.20,000

அனைத்து படிகளுடன் சேர்த்து மாத சம்பளம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.

எம்.எல்.ஏ. விடுதி வாடகை ரூ.250

* பயணப்படி – ரெயிலில் ஏ.சி. இரண்டு அடுக்கு பெட்டிக்கான கட்டணம்.

* தினப்படி – ரூ.500

* தமிழகம் முழுவதும் இலவச பஸ் பாஸ். துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லலாம்.

* வீட்டில் ஒரு டெலிபோன். எம்.எல்.ஏ. விடுதியில் ஒரு டெலிபோன்.

* எம்.எல்.ஏ. குடியிருப்பில் மாதம் ரூ.250 வாடகையில் ஒரு வீடு. (அல்லது)

* விடுதி வாடகை ஒரு நாளைக்கு 2 ரூபாய் 50 பைசா மட்டும்.

அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை

* அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை.

* வெளிச்சந்தையில் வாங்கும் மருந்துகளுக்கான தொகையை திரும்ப பெறலாம்.

* பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு சில நிபந்தனைகளுடன் நிதி உதவி.

* அனைத்து புத்தகங்களுடன் கூடிய பிரமாண்டமான சட்டசபை நூலகத்தை பயன்படுத்தலாம்.

* ஒரு உதவியாளர் உண்டு.

* நோட்டு, பேனா, பென்சில், கவர் உள்ளிட்ட எழுதுபொருட்கள் இலவசம்.

* எம்.எல்.ஏ. விடுதியில் எம்.எல்.ஏ.க்களுக்காக பிரத்யேக ரெயில் டிக்கெட் கணினி முன்பதிவு மையம்.

* ரெயில் நிலையத்தில் இருந்து வேறு இடங்களுக்கு செல்வதற்கு ஆண்டுக்கு 2 தவணையாக ரூ.20,000.

இறந்தால் ரூ.2 லட்சம்

* எம்.எல்.ஏ.வுக்கு எதிர்பாராத மரணம் ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் வசதி.

* இறந்த எம்.எல்.ஏ. குடும்பத்திற்கு குடும்பப்படி மாதம் ரூ.1,000.

* சட்டப்பூர்வ வாரிசுக்கு மொத்த தொகையாக ரூ.2 லட்சம் தரப்படும்.

* இறந்த எம்.எல்.ஏ.வின் சட்டப்பூர்வ வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.5,000 கிடைக்கும்.

இவ்வாறு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஓராண்டுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்ட 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள், மேல்–சபை தேர்தலில் ஓட்டுப்போட முடியுமா? தேர்தல் ஆணையம் முடிவு செய்கிறது
» தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள்
» இன்ஸ்பெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய பெண் எஸ்.ஐ. மீது சஸ்பெண்டு நடவடிக்கை?
» தடை செய்யப்பட்ட பகுதி
» ட்‌ரிம் செய்யப்பட்ட மாற்றான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum