தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராகு:வழிபாடு,பரிகாரம்

Go down

ராகு:வழிபாடு,பரிகாரம் Empty ராகு:வழிபாடு,பரிகாரம்

Post  meenu Fri Jan 18, 2013 1:18 pm

ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி,சந்திரன் ஆகியவை பிரதான கிரகங்கள் ஆகும் . ராகு, கேது ஆகிய இரண்டும் நிழல் கிரகங்கள் ஆகும்.

ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு, கேது இடம்பெறும். மற்ற 7 கிரகங்கள் போல ராகுக்கும், கேதுக்கும் சொந்த வீடு, உச்ச வீடு, நீச்ச வீடு போன்றவை கிடையாது. ராகுவும், கேதுவும் இருக்கும் இடத்தை பொருத்து யோக, அவயோகங்களை தருவார்கள்.

மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும் வல்லமை இந்த 2 கிரகங்களுக்கும் உண்டு. பொதுவாக லக்னத்துக்கு 3, 5, 6, 9, 11 போன்ற ஸ்தானங்களில் உள்ள ராகு, கேது திடீர் தனயோகம், எதிர்பாராத வளர்ச்சி, திடீர் அதிர்ஷ்டங்கள், யோகங்கள் போன்றவற்றை தருவார்கள்.

திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் ராகு, கேதுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருத்தம் பார்க்கும்போது ராகு கேது அமைப்பை பார்த்து முடிவு செய்வது மிக அவசியம். ஒருவரது ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளில் ராகு இருந்தால் உயர்தர ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

ஒருவர் கோடீஸ்வர பட்டம் பெற்று யோக வாழ்க்கை வாழ குரு, கேது சேர்க்கை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களுக்கு மற்ற கிரக அம்சங்களும் சாதகமாக இருந்தால் பெயர், புகழ், அதிகாரம் அந்தஸ்து என எல்லா நலன்களும் யோகங்களும் அதிர்ஷ்டங்களும் எல்லா பக்கங்கள் இருந்தும் குவியும்.

பரிகார ஸ்தலங்கள்:

ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகுக்கு கூறிய ஸ்தலமாகும். சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் ராகுவுக்கு சிறப்பான வழிபாடுகள் தினமும் நடத்தப்படுகின்றன. விஷ்ணு துர்க்கை வழிபாடு பல தடைகளை நீக்கும்.

சிவன் கோயிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும்,பெருமாள் கோயிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை புதன்கிழமை ராகு காலத்திலும் வணங்குவது மிகவும் நல்லது. புற்று இருக்கும் அனைத்து அம்மன் மற்றும் காளி கோயில்களிலும் ராகு பரிகார பூஜைகள் செய்யலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum