தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டாஸ்மாக் கடையில் கதாநாயகன் தேடல்

Go down

டாஸ்மாக் கடையில் கதாநாயகன் தேடல் Empty டாஸ்மாக் கடையில் கதாநாயகன் தேடல்

Post  ishwarya Mon Mar 25, 2013 5:57 pm



தமிழ் சினிமா என்றாலே அது ஒரு கடல் போன்றது. ஏராளமான முத்துக்களும், சிப்பிகளும் சில சமயம் நத்தைகளும் கூட கிடைக்கும். அதுபோல ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு ரகத்தில் அமைந்துவிடும்.

தற்போது புதிய இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள மதுபானக் கடை இதில் எந்த வகை என்று படம் வெளியான பிறகு ரசிகர்களாகிய நீங்கள் பார்த்தால் தான் தெரியும். அதைப் பற்றிய ஒரு முன்னோட்டம் தான் இது.

பெயரிலேயே இருக்கிறது கதையின் முக்கிய விவரம். ஆம், ஈரோட்டில் ஒரு மதுபானக் கடையில் ஒரே நாளில் நடக்கும் சம்பவம்தான் படத்தின் கதை. படம் துவங்கியதும், "இந்த படத்தில் எந்த கதையும் இல்லை. அப்படி இருப்பதாக நீங்கள் கருதினால் அது முழுக்க முழுக்க உங்கள் கற்பனைதான்" என்கிற ஒரு வாசகம் இடம்பெறும் என்கிறார் இயக்குநர் கமலக்கண்ணன்.

பிறகு வேறு என்ன தான் இருக்கும் என்றால், இதில் கதாபாத்திரமும் இல்லை, கதையும் இல்லை, கற்பனையும் இல்லை. ஆனால் நிச்சயமாக குடிகாரர்களோடு சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்கிறார்.

அடடா.. இப்படி இல்லை இல்லை என்று அடுக்கிக் கொண்டே போகிறாரே என்று நினைத்தால், அடுத்து அவர் சொன்ன தகவல் இன்னும் நம் தலையை சுற்ற வைத்தது.

எனக்குக் குடிக்கும் பழக்கம் இல்லை. சுமார் இரண்டரை மாதங்கள் ஒவ்வொரு டாஸ்மாக் கடையாகச் சென்று அங்குள்ள குடிகாரர்களோடு பேசி, கடைசியாக இந்த படத்திற்கான கதாநாயகனை ஒரு டாஸ்மாக் கடையில் தேர்வு செய்தேன் என்கிறார் விளம்பரப் பட இயக்குநரான கமலக்கண்ணன்.

இப்படம் ஜுலை மாதத்தில் வெளியாகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum