தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகா சிவராத்திரி

Go down

மகா சிவராத்திரி Empty மகா சிவராத்திரி

Post  meenu Fri Jan 18, 2013 12:59 pm

சிவ பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரியாம். சிவ ராத்திரி விரதத்தை எண்ணிலாதவர்கள் கடை பிடித்துப் பலனடைந்திருக்கிறார்கள். மாசி மாத தேய்பிறைச் சதுர்த்தியை ஒட்டிக் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி இந்தியா எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

அன்று இரவு முழுவதும் பூஜைகளும், பஜனைகளும் நடைபெறுகின்றன. சிவ பூஜையைச் செய்ய விரும்புபவர்கள் சிவராத்திரியின் மூன்றாவது காலத்தில் உரிய குருவின் மூலம் சிவலிங்கத்தையும் மந்திரதீட்சையையும் பெற்று பூஜையைத் தொடங்குவது சிறப்புடையது.

சிவராத்திரி விரதத்தை அதன் பயன் தெரியாது எதிர்பாராது தற்செயலாக அனுஷ்டித்த போதும் மேலான பலன்களை சிவ பெருமான் அளித்தருள்கிறார். விதரங்களுள் தலையானது சிவராத்திரி விரதமே யாகும்.

சிவராத்திரி பலவகை:

*மாதசிவராத்திரி
*யோகசிவராத்திரி
*நித்ய சிவராத்திரி
*பஷசிவராத்திரி
*மகாசிவராத்திரி
*உத்தமச் சிவராத்திரி
*மத்திமசிவராத்திரி
*அதம சிவராத்திரி
என்பனவையாகும்.

சிறப்புமிக்க சிவராத்திரி:

மாசி மாதம் மகாசிவராத்திரி மற்றும் மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தோடும் தேய்பிறை சதுர்த்தசி செவ்வாய்(அ) ஞாயிரோடு சேர்ந்து வரும் நாளில் நோற்கப்படும். சிவராத்திரி விரதம் 3 கோடிப்பயன் தருவதாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum