தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரைப்பட இயக்குநர் சங்க செயலாளர் பதவியிலிருந்து அமீர் ராஜிநாமா

Go down

திரைப்பட இயக்குநர் சங்க செயலாளர் பதவியிலிருந்து அமீர் ராஜிநாமா Empty திரைப்பட இயக்குநர் சங்க செயலாளர் பதவியிலிருந்து அமீர் ராஜிநாமா

Post  ishwarya Mon Mar 25, 2013 1:04 pm



தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் செயலாளர் பதவியிலிருந்து இயக்குநர் அமீர் ராஜிநாமா செய்துள்ளார்.

இது குறித்த விவரம்:

யு டி.வி. நிறுவனம் தயாரிப்பில் விஜய் இயக்க விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்ஸன் நடித்துள்ள படம் "தாண்டவம்'. இந்தப் படம் வெள்ளிக்கிழமை (செப்.27) வெளியாகிறது.

இந்தப் படத்தின் கதை தன்னுடையது; அதை யு டி.வி. நிறுவனத்திடம் கூறியபோது கதை பிடித்துள்ளதாகவும் விரைவில் படத்தைத் தொடங்கலாம் என்று அந்த நிறுவனம் வாக்களித்தது; ஆனால் தன்னுடைய அனுமதி இல்லாமலேயே படத்தை விஜய் பெயரில் இயக்கி வெளியிடவுள்ளதாகவும் அதனால் படத்தைத் தடை செய்ய வேண்டும் எனவும் உதவி இயக்குநர் பொன்னுச்சாமி என்பவர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக திரைப்பட இயக்குநர் சங்கத்திலும் புகார் அளித்திருந்தார் பொன்னுசாமி.

மனுவை விசாரித்த நீதிமன்றம் "தாண்டவம்' படத்துக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது. இந்தப் பிரச்னையில் சங்கத்தின் செயலாளரான அமீர், "தாண்டவம்' படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி உதவி இயக்குநர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஏழு பேர் தங்கள் பொறுப்புகளை ராஜிநாமா செய்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைமைக்கு அமீர் வியாழக்கிழமை அனுப்பியுள்ள அறிக்கை:

"தாண்டவம்' படத்தின் கதை உரிமைப் பிரச்னை தொடர்பாக என் மீது செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு பேர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். என்னைக் குற்றம் சாட்டுவதாக நினைத்து ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

சந்தேகத்தின் நிழலோடு ஒருபோதும் எந்தப் பதவியிலும் இருக்க விரும்பவில்லை.

எனவே என்னுடைய பதவியை ராஜிநாமா செய்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் அமீர்.

இயக்குநர் சங்கத்தின் செயலாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ள அமீர், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் (பெப்ஸி) தலைவராகப் பொறுப்பேற்று வருகிறார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு பாரதிராஜா தலைவராகவும் ஜனநாதன் பொருளாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜிநாமா முடிவில் மாற்றம் இல்லை: அமீர்
» தைரியமும் வீர்யமும் கொண்ட தலைவர் சீமான்! – இயக்குநர் அமீர்
» இயக்குநர் சங்க மோதல்: பாரதிராஜாவுக்கு கோர்ட் நோட்டீஸ்
» திரைப்பட இயக்குநர் சங்கத்துக்காக தனி இணையதளம், வெப் டி.வி. தொடக்கம்
» தேசிய திரைப்பட விருதுகள் – சிறந்த இயக்குநர் பாலா – நான் கடவுளுக்கு 2 விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum