தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உதயநிதி தயாரிப்பில் சுந்தரபாண்டியன் பட இயக்குநரின் அடுத்த படம்

Go down

உதயநிதி தயாரிப்பில் சுந்தரபாண்டியன் பட இயக்குநரின் அடுத்த படம் Empty உதயநிதி தயாரிப்பில் சுந்தரபாண்டியன் பட இயக்குநரின் அடுத்த படம்

Post  ishwarya Mon Mar 25, 2013 11:38 am



இயக்குநர் என்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் உருவான சுந்தர பாண்டியன் படத்தில் கவர்ந்திழுக்கப்பட்ட உதயநிதி, அடுத்த படத்தை தனது பேனரில் இயக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

பிரபாகரனின் இரண்டாவது படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

சுந்தரபாண்டியன் படம் வெளியான அன்றே படத்தை பார்த்துவிட்டு என்னை தொலைபேசியில் அழைத்தார் உதயநிதி. அவரது அலுவலகத்துக்குச் சென்ற போது படத்தைப்பற்றி ஒவ்வொரு விஷயமாகக் கூறி பாராட்டினார். இப்படத்தில் பெண்களின் கதாப்பாத்திரம் மீதான அழுத்தம் குறித்து வெகுவாகப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் இயக்குநர் பிரபாகரன்.

சுந்தரபாண்டியன் படம் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்ற வகையில் சசிகுமார் தன்னை வெகுவாகப் பாராட்டியதாகக் கூறியுள்ள பிரபாகரன், தனது அடுத்த படத்தில், படக்குழு முழுவதையும் தானே தேர்வு செய்து கொள்ள முழு சுதந்திரம் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum