தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருநாகேஸ்வரம் கோவில்

Go down

திருநாகேஸ்வரம் கோவில் Empty திருநாகேஸ்வரம் கோவில்

Post  meenu Fri Jan 18, 2013 11:21 am

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருநாகேஸ்வரம். இங்கு நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, சிவபெருமானை பூசித்த நாகநாதர் கோவில் உள்ளது. நாக அரசராகிய ராகு பூசித்த காரணத்தால், இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த கோவிலில் நாகநாதசுவாமி, பிறையணி அம்மன், கிரிகுஜாம்பிகை ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர். கோவிலின் வெளி சுற்று பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகுபகவான் இரு தேவியருடன் எழுந்தருளி உள்ளார்.

இத்தலத்தில் உள்ள ராகுவை வழிபடுவோருக்கு காலசர்ப்பதோஷம், சர்ப்பதோஷம், புத்திரதோஷம், களத்திரதோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் இக்கோவிலில் உள்ள ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் நடைபெறும் போது, அவருடைய மேனியில் ஊற்றப்படும் பால் நீல நிறமாக மாறும் என்பது தனிச்சிறப்பாகும்.

ராகு பெயர்ச்சி விழா:

ராகுதோஷம் நீக்கக்கூடிய ராகு தலமாக விளங்கும் இக்கோவிலில் 16-ந் தேதி (திங்கட்கிழமை) ராகு பெயர்ச்சி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ராகு பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயரும் நேரமான காலை 9.48 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளன.

ராகு பெயர்ச்சி விழாவையொட்டி, நாகநாதர் கோவிலில் இரண்டு கட்டமாக லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. விழா நடைபெறும் 16-ந் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜைகள் நடைபெற்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

விழாவினையொட்டி சிறப்பு ஹோமங்கள், தயிர் பள்ளயம், சந்தனகாப்பு அலங்காரம், அன்னதானம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

விருச்சிகம், தனுசு, கும்பம், ரிஷபம், துலாம், மீனம், சிம்மம் ஆகிய ராசி உடையவர்கள் இத்தலத்தில் ராகு பெயர்ச்சி தினத்தன்று பரிகாரம் செய்து கொள்வது நல்ல பலன் அளிக்கும்.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum