தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எளிமையாக பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி

Go down

எளிமையாக பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி Empty எளிமையாக பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி

Post  ishwarya Sat Mar 23, 2013 6:06 pm



சென்னை, டிச. 12: நடிகர் ரஜினிகாந்தின் 62வது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நலத் திட்ட உதவிகளுடன் நடைபெற்றன.

தனது 62-வது பிறந்த நாளை சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் திங்கள்கிழமை எளிமையாகக் கொண்டாடினார் ரஜினிகாந்த். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் ரசிகர் மன்றங்கள் சார்பாக சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகள் நடைபெற்றன. கோவில்களில் வழங்கப்பட்ட பிரசாதங்களை ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரஜினியின் போயஸ் தோட்டம் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது மனைவி லதாவிடம் வழங்கினர். அவர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் குடும்பம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் லதா.

பிரபல நடிகர்களும் ரஜினியின் நண்பர்களுமான கமல்ஹாசன், அமிதாப் பச்சன், மோகன்பாபு உள்ளிட்ட பலர் தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தனர். இயக்குநர்கள் கே. பாலசந்தர், ஷங்கர், பி. வாசு ஆகியோரும் தொலைபேசி மூலம் ரஜினிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ஏழை, எளியோருக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கியும், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு வழங்கியும் ரத்த தானம் செய்தும் ரஜினியின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.



கருணாநிதி வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை நடிகர் ரஜினிகாந்த் 62-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனையொட்டி ரஜினிகாந்த்தை திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

ஞானதேசிகன் வாழ்த்து: நடிகர் ரஜினிகாந்த்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தி: 62-வது பிறந்த நாள் கொண்டாடும் தங்களுக்கு என் சார்பாகவும், தமிழக காங்கிரஸ் சார்பாகவும் வாழ்த்துக்கள். உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என இந்த நேரத்தில் பிரார்த்திக்கிறேன். பிறந்தோம், இருந்தோம் என்று இருக்கும் மனித வாழ்க்கையில் வரலாற்றில் இடம்பெறும் சிலரில் நீங்களும் ஒருவர். உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உங்களை வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

"நான் யானை அல்ல, குதிரை. விழுந்தாலும் உடனே எழுவேன்' என்று பாபா படத்துக்குப் பிறகு, சந்திரமுகி படம் வெளியாவதற்கு முன்பு தாங்கள் சொன்ன வார்த்தைகள், காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும் என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன் என ஞானதேசிகன் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum