தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டி
Page 1 of 1
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டி
சென்னை, செப்.27: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த ராம.நாராயணன் ராஜிநாமா செய்ததையடுத்து புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அக்டோபர் 9-ம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு செயலாளர்கள், பொருளாளர், 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்புத் தலைவராக உள்ள எஸ்.ஏ.சந்திரசேகரனும், தயாரிப்பாளர் கேயாரும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள். எஸ்.ஏ.சந்திரசேகரன் சார்பில் போட்டியிடும் அணி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் நலம் காக்கும் அணி என்ற பெயரிலும், கேயார் தலைமையிலான அணி, தயாரிப்பாளர் முன்னேற்ற அணி என்ற பெயரிலும் போட்டியிடுகிறது.
எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு புஷ்பா கந்தசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோரும் செயலாளர் பதவிக்கு கே.ஆர்.ஜி., தேனப்பன் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு கலைப்புலி தாணுவும் போட்டியிடுகிறார்கள். இந்த அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ராதாரவி, கோவைத்தம்பி, சங்கிலிமுருகன், ஆர்.கே.செல்வமணி, எடிட்டர் மோகன், வி.சேகர், மைக்கேல் ராயப்பன், ஷக்தி சிதம்பரம், பி.டி.செல்வகுமார், அமுதா துரைராஜ் உள்ளிட்ட 21 பேர் போட்டியிடுகிறார்கள்.
கேயார் அணியில் துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு முறையே ஏ.எம்.ரத்னம், ஞானவேல் ராஜா, எல்.எம்.முரளி, அன்பாலயா பிரபாகரன், சத்யஜோதி தியாகராஜன், டி.சிவா, எச்.முரளி, கே.ராஜன், ஆபாவாணன், ஐங்கரன் விஜயகுமார், அழகன் தமிழ்மணி, கே.பி.பிலிம்ஸ் பாலு, ஜாகுவார் தங்கம், பாரதிகண்னன் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.
செவ்வாய்க்கிழமை மாலை, வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. எந்தெந்தப் பொறுப்புகளுக்கு யார் போட்டியிடுகிறார்கள் என்ற இறுதிப் பட்டியல் வியாழக்கிழமை (செப்.29) வெளியாகும். அக்டோபர் 9-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் 750-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவுள்ளனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டி
» தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தல்: எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். போட்டி; இன்று வேட்பு மனு தாக்கல்
» தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார் எஸ்.ஏ.சந்திரசேகரன்
» தயாரிப்பாளர் சங்க விவகாரம்: எஸ்.ஏ.சந்திரசேகரன் - கேயார் ஆதரவாளர்கள் மோதல்
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம நாராயணன் அணி அமோக வெற்றி!
» தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தல்: எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். போட்டி; இன்று வேட்பு மனு தாக்கல்
» தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார் எஸ்.ஏ.சந்திரசேகரன்
» தயாரிப்பாளர் சங்க விவகாரம்: எஸ்.ஏ.சந்திரசேகரன் - கேயார் ஆதரவாளர்கள் மோதல்
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம நாராயணன் அணி அமோக வெற்றி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum