தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அர்ஜூனுடன் ஜோடி சேரும் லஷ்மிராய்

Go down

அர்ஜூனுடன் ஜோடி சேரும் லஷ்மிராய் Empty அர்ஜூனுடன் ஜோடி சேரும் லஷ்மிராய்

Post  ishwarya Sat Mar 23, 2013 2:38 pm



தற்போது கோலிவுட்டில் பிசியாக உள்ள நடிகைகளில் லஷ்மிராயும் ஒருவர். பி.டி. செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஒன்பதில் குரு படத்தில் வினய் மற்றும் சந்தானத்துடன் லஷ்மிராய் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழில் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் இந்த படத்தில் வழக்கமான கதாநாயகி கதாப்பாத்திரமாக அல்லாமல், கதையின் நாயகியாக நடிக்கிறார்.

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா இயக்க உள்ளார்.

இது குறித்து நம்மிடம் பேசிய லஷ்மிராய், இதுபோன்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. வெறும் நாயகியாக மட்டும் அல்லாமல், கதையின் நாயகியாக நடிக்க உள்ளேன். கதைப்படி, இளம் பெண்ணாகவும், குடும்ப பெண்ணாகவும் நடிக்கிறேன் என்று கூறினார்.

லஷ்மி ராய் இப்படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்கிறார். வனயுத்தம் படத்துக்குப் பிறகு இருவரும் இப்படத்தில் மீண்டும் ஜோடி சேருகின்றனர். இதுமட்டுமல்லாமல், கோடி ராமகிருஷ்ணா - அர்ஜூன் கூட்டணியில் உருவாகும் 6வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum