தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சட்டம் ஒரு இருட்டறை: ஆடியோ வெளியீடு

Go down

சட்டம் ஒரு இருட்டறை: ஆடியோ வெளியீடு Empty சட்டம் ஒரு இருட்டறை: ஆடியோ வெளியீடு

Post  ishwarya Sat Mar 23, 2013 2:17 pm

30 வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் நடிப்பில், நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை. தற்போது இந்தப் படம் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகரனின் பேத்தி சினேகா பிரிட்டோ இயக்கியுள்ளார். அவருடைய தாயார் விமலாராணி தயாரித்துள்ளார். தமன், ரீமாசென், பிந்து மாதவி, பியா ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி இன்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் சினேஹா பிரிட்டோ, நடிகர் தமன் குமார், நடிகைகள் பியா, பிந்து மாதவி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இயக்குனர்கள் பாலா, எம்.ராஜேஷ், சந்திர சேகர், ஷோபா சந்திரசேகர், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum