தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டி.டி.எச். மூலம் "விஸ்வரூபம்' வெளியீடு: கமலுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு

Go down

டி.டி.எச். மூலம் "விஸ்வரூபம்' வெளியீடு: கமலுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு Empty டி.டி.எச். மூலம் "விஸ்வரூபம்' வெளியீடு: கமலுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு

Post  ishwarya Sat Mar 23, 2013 2:12 pm



நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள "விஸ்வரூபம்' படத்தை ஒரே நாளில் திரையரங்குகளிலும் டி.டி.எச். மூலமாகவும் வெளியிட தயாரிப்பாளர்களில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசனின் "விஸ்வரூபம்' படம் வரும் 2013-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அதே நாளில் இந்தப் படத்தை டி.டி.எச். (DTH - Direct to Home) சேவை மூலம் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளார் கமல்.

இந்தப் புதிய முயற்சிக்கு திரையுலகில் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. டி.டி.எச். மூலம் ஒளிபரப்புவதால் ஏற்படக்கூடிய நன்மை குறித்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களிடம் கமல்ஹாசன் விளக்கிக் கூறினார்.

இதையடுத்து தயாரிப்பாளர்கள் கமல்ஹாசனின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டி.டி.எச். பற்றி கமல்: டி.டிஎச். சேவை என்பது எல்லோருடைய வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டி போன்றது இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சேனல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.

சினிமா அரங்குக்கே செல்ல மறந்த, மறுத்து வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது.

டி.டி.எச். மூலம் ஒரே ஒரு முறை படம் காட்டப்படும். இதைப் பதிவு செய்ய முடியாது. படத்தைப் பார்த்து முடித்தவுடன் படம் டி.டி.எச். கருவியில் தங்காது. ஒருமுறை இந்தப் படத்தைப் பார்க்க ரூ.1000 கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த மகிழ்ச்சி தவிர தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாக கிடைக்காது.

தமிழக மக்கள் தொகையில் வசதி படைத்த 3 சதவீத மக்களிடம் மட்டுமே டி.டி.எச். இருக்கிறது. அதில் நாங்கள் 1 சதவீத வாடிக்கையாளர்களிடம் மட்டுமே படத்தைக் காட்டுகிறோம். 7 கோடியில் ஒரு சதவீதத்தினர் டி.டி.எச். மூலம் படம் பார்ப்பதால் திரையரங்குகளுக்கு நஷ்டம் ஏற்படாது. இதன் மூலம் திருட்டு வி.சி.டி.க்களையும் ஒழிக்க முடியும். தமிழ் சினிமாவின் வியாபாரம் மேலும் அதிகரிக்கும்.

பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ள ஒரு பக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

ராஜ்கமல் நிறுவனத்தின் இந்தப் புதிய முயற்சியை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என நம்புவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதையடுத்து இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கூறியது:

கமல்ஹாசனைப் பொருத்தவரை தொலைநோக்கு சிந்தனை உடையவர். 1970-களில் கமல்ஹாசன் கோவணத்துடன் வருவதுபோல "16 வயதினிலே' படத்தை எடுத்தபோது இந்தப் படத்தை யார் வாங்குவார்கள் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்தப் படம் திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடியது.

1980-களில் வெளிநாடுகளில் தமிழ்ப் படத்தையே வாங்க மாட்டார்கள். ஆனால் தன்னுடைய "அபூர்வ சகோதரர்கள்' படத்தை வெளிநாடுகளில் விற்க கடும் முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார்.

கமல்ஹாசனின் அந்த முயற்சிக்குப் பிறகுதான் தமிழ்த் திரைப்படங்கள் வெளிநாடுகளில் விற்பனையாகின. தற்போது அவருடைய "விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளார். ஒரு தயாரிப்பாளராக இல்லாமல் விநியோகஸ்தராகவும் உள்ள கமல், விகிதாசார அடிப்படையில் "விஸ்வரூபம்' படத்தை திரையரங்குகளுக்கும் கொடுக்கவுள்ளார். திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால்தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

தான் சினிமாவில் சம்பாதித்ததை லாப, நஷ்ட கணக்குப் பார்க்காமல் இந்தப் புதிய பரிசோதனைக்கு அவர் செலவிட்டுள்ளார். ஆகவே திரையரங்கு உரிமையாளர்கள் உள்பட திரையுலகினர் அனைவரும் கமல்ஹாசனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் பாரதிராஜா.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், கே.முரளிதரன், டி.சிவா, கேயார், தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை செயலாளர் பிரசாத், பொருளாளர் சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கமல்ஹாசனின் டி.டி.எச். ஒளிபரப்பு குறித்து விநியோகஸ்தர்கள் சங்கம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 11) கூடி தங்களது முடிவை வெளியிடவுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம்: கமலுக்கு ரஜினி ஆதரவு
»  ஜனவரி 25-ல் "விஸ்வரூபம்' வெளியீடு - டீ.டி.எச். மூலம் எப்போது?
» விஸ்வரூப பிரச்னையில் கமலுக்கு நடிகர் அமிர்கான் ஆதரவு
» கமலுக்கு நடிகர் அர்ஜூன் ஆதரவு: தமிழகத்தைவிட்டு போக வேண்டாம் என வேண்டுகோள்
» டிடிஎச் விவகாரம்… கமலுக்கு முழு ஆதரவு – பிலிம்சேம்பர், கேயார் அணி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum