தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழம்பெரும் ஒளிப்பதிவாளர் கர்ணன் காலமானார்

Go down

பழம்பெரும் ஒளிப்பதிவாளர் கர்ணன் காலமானார் Empty பழம்பெரும் ஒளிப்பதிவாளர் கர்ணன் காலமானார்

Post  ishwarya Sat Mar 23, 2013 2:09 pm



பழம் பெரும் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கர்ணன் (79) சென்னையில் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

"கற்பகம்' திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் கர்ணன். இவர் சிவாஜி கணேசன் நடித்த "கப்பலோட்டிய தமிழன்', "வீரபாண்டிய கட்டபொம்மன்', எம்.ஜி.ஆர். நடித்த "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்', கமல் நடித்த "சிம்லா ஸ்பெஷல்', ரஜினி நடித்த "பொல்லாதவன்', "சிவப்பு சூரியன்' உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

இதில் 25 படங்களை இவரே இயக்கியுள்ளார். இவர் "ராஜா சாண்டோ' விருது பெற்றவர்.

சென்னை சூளைமேட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த கர்ணன், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவுடன் இருந்தார். இவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் கர்ணன் உயிரிழந்தார். இவருக்கு திரைத்துறையை சார்ந்த பல்வேறு நபர்கள் அஞ்சலி செலுத்தினர். இவரது உடல் சேத்துப்பட்டில் உள்ள மயானத்தில் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்படவுள்ளது. மறைந்த ஒளிப்பதிவாளர் கர்ணனுக்கு சகுந்தலா என்ற மனைவியும், பாமா, சாரா என்று இரண்டு மகள்களும் உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum