தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல் ஹாசனுக்கு இயக்குனர் பாரதிராஜா ஆதரவு!

Go down

கமல் ஹாசனுக்கு இயக்குனர் பாரதிராஜா ஆதரவு! Empty கமல் ஹாசனுக்கு இயக்குனர் பாரதிராஜா ஆதரவு!

Post  ishwarya Sat Mar 23, 2013 1:49 pm



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் ஜனவரி 11ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தை வழக்கமான முறையில் திரையரங்குகளில் வெளியிடுவதுடன், டி.டி.எச். முறையில் வீடுகளுக்கே நேரடியாக ரிலீஸ் செய்யவும் நடிகர் கமல் திட்டமிட்டுள்ளார்.

கமலின் இந்தப் புதிய முறைக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா கமலின் புதிய முயற்சியை பாராட்டியதோடு அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். திரைப்படத்தயாரிப்பாளர்கள் இந்த புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் எதிர்வரும் படங்களில் இதுபோன்ற புதிய முயற்சிகளை உருவாக்க வேண்டும். இனிவரும் என்னுடைய படங்களையும் டி.டி.எச். முறையில் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ள இருக்கிறேன் என்றார் பாரதிராஜா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum