தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புகை பிடிக்கும் காட்சியில் நடித்த மோகன்லால் மீது கேரள அரசு வழக்கு

Go down

புகை பிடிக்கும் காட்சியில் நடித்த மோகன்லால் மீது கேரள அரசு வழக்கு Empty புகை பிடிக்கும் காட்சியில் நடித்த மோகன்லால் மீது கேரள அரசு வழக்கு

Post  ishwarya Sat Mar 23, 2013 1:48 pm



புகை பிடிப்பது போன்ற காட்சியில் நடித்த மலையாள நடிகர் மோகன்லால் மீது கேரள அரசின் சுகாதாரத்துறை வழக்கு தொடுத்துள்ளது.

கேரளத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளைக் காட்டுவது குற்றமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் மோகன்லால் நடித்த "கர்மயோதா' என்ற மலையாளத் திரைப்படத்தின் போஸ்டர்கள் திருவனந்தபுரத்தின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.

அவற்றில் மோகன்லால் சுருட்டு புகைப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மோகன்லால், படத்தின் இயக்குநர் மேஜர் ரவி, படத் தயாரிப்பாளர்கள் ஆகியோர் மீது கேரள சுகாதாரத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மார்ச் மாதம் 18-ம் தேதி ஆஜராகுமாறு மோகன்லால் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்களும் அகற்றப்பட்டன.

கடந்த சில நாள்களுக்கு முன்பு மலையாள நடிகை மைதிலி நடித்த "மேட்னி' என்ற படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றில் மைதிலி சிகரெட் பிடிப்பது போன்ற படங்கள் இடம்பெற்றிருந்ததால் அவர் மீதும் கேரள சுகாதாரத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. மைதிலியையும் மார்ச் 18-ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மயக்கம் என்ன படத்தில் புகை பிடிக்கும் காட்சியில் விதிமுறை மீறல் – அன்புமணி குற்றச்சாட்டு
» எதிர்ப்பு எதிரொலி: தனுஷ் புகை பிடிக்கும் காட்சி நீக்கம்?
» திருமணத்திற்கு பின் கிளுகிளுப்பான காட்சியில் நடித்த நடிகை
» லட்சுமிராய் நடித்த சண்டை காட்சியில் விபத்து
» நிர்வாண காட்சியில் துணிச்சலாக நடித்த நடிகை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum