தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம்: சேலம் விநியோக உரிமையை வாங்கிய உதயநிதி

Go down

விஸ்வரூபம்: சேலம் விநியோக உரிமையை வாங்கிய உதயநிதி Empty விஸ்வரூபம்: சேலம் விநியோக உரிமையை வாங்கிய உதயநிதி

Post  ishwarya Sat Mar 23, 2013 12:46 pm



விஸ்வரூபம் திரைப்படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை முதலில் கடந்த 10ஆம் தேதி டிடிஹெச் முறையில் வெளியிடுவதற்கு அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் திட்டமிட்டது. அதற்கு மறுநாள் திரையரங்குகளில் வெளியிட உத்தேசிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு திரையரங்கு உரிமையாளர்களிடையே இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. 45 திரையரங்குகள் தவிர மற்ற அனைத்து திரையரங்களும் படத்தைப் புறக்கணித்தனர். இதனால் கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டார் கமல் ஹாசன்.

இந்த நிலையில், அவரது கலைப் பணியை மதிக்கும் வகையில், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இணைந்து சமரச முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து விஸ்வரூபம் முதலில் தியேட்டர்களிலும், 7 நாட்கள் கழித்து டிடிச்சிலும் வெளியிட முடிவு செய்யப்பட்டது. இந்த சமரச முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, விஸ்வரூபம் படத்தின் ஏரியாக்களை விநியோகஸ்தர்கள் வாங்கிக் கொள்ள முன்வந்தனர்.

இதில் சேலம் பகுதி விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் வாங்கியுள்ளது. இதனை உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

வரும் 25ம் தேதி விஸ்வரூபம் திரைப்படம் தமிழகம் முழுவதும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum