தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி

Go down

எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி Empty எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி

Post  ishwarya Sat Mar 23, 2013 11:50 am



தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது கேயார் தரப்பு கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி நடந்த போட்டி பொதுக்குழுவில் பதிவான 215 வாக்குகள் 11-ஆவது சிட்டி சிவில் கோர்ட்டில் சனிக்கிழமை எண்ணப்பட்டன. அதில் கேயார் தரப்புக்கு 210 வாக்குகள் கிடைத்துள்ளதால், எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு முறைப்படி நடந்த தேர்தலில் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக பி.எல். தேனப்பனும், பொருளாராக கலைப்புலி தாணுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிர்வாகக் குழு தங்களின் சுயநலனுக்காக தயாரிப்பாளர் சங்கத்தை பயன்படுத்துவதாக கூறி போட்டி பொதுக் குழுவை கேயார் தரப்பு கூட்டியது.

உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில், நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் வாக்களித்தனர்.

அந்த வாக்குகள் 11-ஆவது சிட்டி சிவில் கோர்ட் நீதிபதி குமணன் கண்காணிப்பில் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் சனிக்கிழமை எண்ணப்பட்டது.

இது குறித்து கேயார் கூறுகையில், "" எஸ்.ஏ.சந்திரசேகரன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. அதனால் அவர் தலைமையிலான நிர்வாகக் குழு உடனே பதவி விலக வேண்டும். இல்லையென்றால் நாங்களே அவர்களை வெளியேற்றுவோம் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எஸ்.ஏ.சந்திரசேகரன் அணி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்
» தலைவர் பதவியிலிருந்து எஸ்.ஏ. சந்திரசேகரன் நீக்கம்: சிறப்புப் பொதுக்குழுவில் தீர்மானம்
» ஐஸ்வர்யா ராய்க்கு நம்பிக்கை தந்த எந்திரன் வெற்றி!
» எஸ்.ஏ. சந்திரசேகரன் மீது போலீஸில் கேயார் புகார்
» தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: நீதிபதி பத்மநாபன் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum