தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனக்கு தம்பி சந்தானம் கிடைச்ச மாதிரி இன்னொரு தம்பி விஜய்: பவர் ஸ்டார்

Go down

எனக்கு தம்பி சந்தானம் கிடைச்ச மாதிரி இன்னொரு தம்பி விஜய்: பவர் ஸ்டார் Empty எனக்கு தம்பி சந்தானம் கிடைச்ச மாதிரி இன்னொரு தம்பி விஜய்: பவர் ஸ்டார்

Post  ishwarya Fri Mar 22, 2013 5:09 pm



எனக்கு தம்பி விஜய் மேல் மரியாதையும் பாசமும் இருக்கிறது என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேவி திரையரங்கில் 'ஒன்பதுல குரு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் விஜய் கலந்து கொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார். பவர் ஸ்டார், லட்சுமி ராய், கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். திரை விழாவை சிறப்பிக்க ஒரு பார்த்திபன் போன்று இப்போதெல்லாம் பவர் ஸ்டார். இவர் பேச ஆரம்பித்தாலே விழா மேடையே சிரிப்பில் அதிர்கிறது. அதே போல் இந்த விழா மேடையிலும் தன்னுடைய கலகலப்பான பேச்சால் அனைவரையும் ரசிக்க வைத்தார்.

விழாவில் பவர் ஸ்டார் பேசியதாவது: கண்ணடா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் இசை வெளியீட்டு இந்த திரையரங்கில்தான் நடந்தது. அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. என்னிடம் ஒன்பது குரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என்று கேட்டனர். முதலில் யோசித்த நான் இந்தப் படத்தின் இயக்குனர் விஜய்யின் பிஆர்ஓ என்று சொன்ன ஒரே காரணத்துக்காகதான் படத்தில் ஆட சம்மதித்தேன். என்னுடைய பாடலை ஒரே நாளில் படமாக்கிவிட்டார்கள். ஏற்கெனவே, எனக்கு ஒரு தம்பி சந்தானம் கிடைச்ச மாதிரி இன்னொரு தம்பி விஜய் கிடைச்சிருக்காரு. தம்பி விஜய் மேல நான் மரியாதையும் பாசமும் வச்சிருக்கேன். மேலும் ஒன்பதுல குரு திரைப்படம் வெற்றிடைய என்னுடைய வாழ்த்துக்கள் என இவ்வாறு கூறினார் பவர் ஸ்டார்.

விஜய்யின் பி.ஆர்.ஓ. பி.டி.செல்வகுமார் இயக்கியுள்ள ஒன்பதுல குரு திரைப்படத்தில் வினய் ராய், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், சத்தியன் ஆகியோர் நடித்துள்ளனர். யுத்தம் செய் இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum