நெல் சாகுபடியில் குலை நோய்
Page 1 of 1
நெல் சாகுபடியில் குலை நோய்
தற்போது நிலவி வரும் பருவநிலை காரணமாக நெல் பயிரில் குலை நோய் தாக்குதல் சில இடங்களில் காணப்படுகிறது.
நோய்க்கான காரணங்கள்
குறைவான இரவு வெப்ப நிலை, அதிகப்படியான ஈரப்பதம், மேகமூட்டத்துடன் லேசான தூறல், அதிக தழைச்சத்து, முந்தைய பருவத்தின் பயிர் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால், குலை நோய் தாக்கும்.
நெல் விதைகளை நாற்றங்கால் தயாரிப்பதற்கு முன்பு சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ் உயர் பூஞ்சாண கொல்லியுடன் 10 கிராம் ஒரு கிலோ விதைக்கு என விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
கூடுதலாக தழைச்சத்து இடுதலை தவிர்த்து, குலை நோய் தாக்காத ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
அதிகப்படியான தண்ணீர் வயலில் தேங்குவதை தவிர்த்து, வரப்பில் காணப்படும் களைச்செடிகளை அப்புறப்படுத்தினால், நோய் வராமல் தவிர்க்கலாம்.
அறிகுறிகள்:
பைரிகுளோரியா ஒரைசா என்ற பூசாண நோய் கிருமி இலைகளை தாக்கும்.
தாக்கப்பட்ட இடத்தில் சாம்பல் நிறப்புள்ளிகள் பழுப்பு நிற எல்லை கோடுகளுடன் வைர வடிவத்தில் அல்லது உருளை வடிவத்தில் காணப்படும்.
புள்ளிகள் ஒன்று சேர்ந்து தீ பட்டது போல் அறிகுறிகளை ஏற்படுத்தும்.
கதிர்களில், மணிகளிலும் இது போன்ற தாக்குதலை ஏற்படுத்தும். இதனால், நெல் மணிகள் பதர்களாக மாறுகின்றன.
பயிரின் தண்டுப்பகுதிகளிலும் பழுப்பு நிறப்புள்ளிகள் காணப்படும்.
தடுக்கும் முறைகள்:
தாக்குதல் தென்பட்டதும், கார்டென்டிசம் 250 கிராம் ஒரு எக்டருக்கு என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
தாக்குதலின் தன்மை தீவிரமாக காணப்பட்டால், ட்ரைசைக்ளோசால் 75 என்ற மருந்தை ஒரு எக்டருக்கு 500 கிராம் தெளிக்கலாம்.
மருந்துகளை காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
மழை பெய்யும் நேரத்தில் மருந்து தெளிக்க கூடாது என
இவ்வாறு வேளாண்மை இணை இயக்குனர் முத்துசாமி அறிவுரை அடிப்படையில் வேளாண் உதவி இயக்குனர் சைலஸ் தெரிவித்துள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» நெல் சாகுபடியில் உர மேலாண்மை
» நெல் சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
» திருந்திய நெல் சாகுபடியில் நாற்று நடவு நுட்பங்கள்
» நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum