தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காமெடி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் : வினய்

Go down

காமெடி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் : வினய் Empty காமெடி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் : வினய்

Post  ishwarya Fri Mar 22, 2013 2:41 pm

ஒன்பதுல குரு படத்தில் நடித்திருக்கும் நடிகர் வினய் தற்போது உற்சாகமாகக் காணப்படுகிறார்.

என்ன சார் இது. ஒன்பதுல குரு படத்தின் இசை வெளியீட்டுக்கு வரவேயில்லையே என்று கேட்டதற்கு, ஒன்பதுல குரு படத்தின் இசை வெளியீட்டு விழா அன்றுதான் என் சகோதரரின் திருமணம் நடந்தது. அதனால் தான் அவ்விழாவில் பங்கேற்க முடியவில்லை என்றார்.

ஆனால், இசையை நடிகர் விஜய் வெளியிட்டதும், பட வெளியீட்டுக்கு அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் வரவிருப்பதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இவர்களது வாழ்த்து படத்தின் வெற்றிக்கு அடித்தளம் இடும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

ஒன்பதுல குரு படத்தில் நகைச்சுவை பாத்திரம் எடுத்து நடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார் வினய்.

நகைச்சுவை என்றால் எனக்கு ரொம்ப புடிக்கும். இப்படத்தின் மூலம் எனது நடிப்புத் திறமை வெளியாகும் என்று நான் நம்புகிறேன். தமிழ் ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் படம் அமைந்துள்ளது என்கிறார்.

படத்தின் இசையமைப்பாளர் கே. பற்றி கூற வண்டும் என்றால், அவருக்கு வெறும் 26 வயதுதான் ஆகிறது. ஆனால் படு திறமைசாலி. அதேப் போலத்தான், நடிகை லட்சுமிராய். நன்கு கலகலப்பாக எல்லோரிடமும் பழகக் கூடியவர். இயக்குநர் பி.டி. செல்வக்குமார், ஒரு பெரிய ஷெட்யூலை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார். பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோருடன் நடித்தது ஒரு மகிழ்ச்சியான குடும்பத்துடன் இருந்தது போல் இருக்கிறது என்று முடித்தார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum