தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கல்யாணம் முடிந்ததும் கல்யாண சமையல் சாதம்

Go down

கல்யாணம் முடிந்ததும் கல்யாண சமையல் சாதம் Empty கல்யாணம் முடிந்ததும் கல்யாண சமையல் சாதம்

Post  ishwarya Fri Mar 22, 2013 2:34 pm

கல்யாணம் முடிந்ததும் எப்போதுமே கல்யாண சமையல் சாதம் தயாராகிவிடும். பிரசன்னா வாழ்கையில் அது உண்மையாகிவிட்டது.

ஃபைவ் ஸ்டார் படம் மூலம் அறிமுகமான பிரசன்னா பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர். தனது காதலி சினேகாவை கரம் பிடித்த கையோடு படப்பிடிப்புகளுக்கு கிளம்பி வந்தவர் இன்று வரை பிசியாகவே உள்ளார்.

2013ஆம் ஆண்டு எனக்கு மிக நல்ல ஆண்டாக பிறந்துள்ளது என்கிறார் பிரசன்னா. தற்போது 'சென்னையில் ஒரு நாள்' என்ற படத்தில் நடித்து வரும் பிரசன்னா, இப்படத்தில் மருத்துவர் கதாப்பாத்திரத்திலும், அவருக்கு ஜோடியாக இனியாவும் நடிக்கிறார்.

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன 'டிராபிக்' படத்தின் ரீமேக் தான் 'சென்னையில் ஒரு நாள்'. இப்படம் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை பின்னணியாக வைத்த கதையாம். ஒரு சிறுவன், இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக 13 நிமிடங்களில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டியதே கதையின் களம். இப்படத்தில் ஒரு நல்ல சமூகக் கருத்தும் உள்ளது என்கிறார் பிரசன்னா.

பிரசன்னா நடித்து வரும் அடுத்த படம் 'கல்யாண சமையல் சாதம்'. இப்படத்துக்கான படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. இப்படத்தை படு வேகமாக எடுத்து வருகிறோம். ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தை புதிய இயக்குநர் எடுத்து வருகிறார். ஒரு திருமண வைபத்தில் நடக்கும் குழப்பங்களும், நகைச்சுவையும் மையமாகக் கொண்டதே இப்படத்தின் கதை. தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்குப் படமாக இது நிச்சயம் அமையும் என்கிறார் நம்பிக்கையோடு.

கல்யாணம் முடிந்த கையோடு, கல்யாண சமையல் சாதம் மற்றும் சென்னையில் ஒரு நாள் படப்பிடிப்புகளில் பிசியாகிவிட்டார் பிரசன்னா. எனவே, இப்படங்களின் வெளியீட்டை அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum