தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயாரிப்பாளர் சங்க விவகாரம்: எஸ்.ஏ.சந்திரசேகரன் - கேயார் ஆதரவாளர்கள் மோதல்

Go down

தயாரிப்பாளர் சங்க விவகாரம்: எஸ்.ஏ.சந்திரசேகரன் - கேயார் ஆதரவாளர்கள் மோதல் Empty தயாரிப்பாளர் சங்க விவகாரம்: எஸ்.ஏ.சந்திரசேகரன் - கேயார் ஆதரவாளர்கள் மோதல்

Post  ishwarya Fri Mar 22, 2013 2:20 pm



தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் கேயார் ஆதரவாளர்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்தது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்விடையந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகக் குழு பதவி விலக வேண்டும் என கேயார் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக சனிக்கிழமை சென்னை ஃபிலிம் சேம்பரில் தன் ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த கேயார் கூறியது:

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.தாணு, பி.எல். தேனப்பன் உள்ளிட்ட 27 பேர் உடனடியாக பதவி விலக வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய சென்னை மாவட்ட பதிவாளரிடம் இது தொடர்பான வழக்குகளின் தீர்ப்பு நகல்களை வழங்கினோம். சில முறைகேடுகள் பற்றியும் குறிப்பிட்டோம். அதனை பரிசீலித்த மாவட்ட பதிவாளர், எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகக் குழு செயலிழந்து விட்டதாகவும், இனி செயல்பட கூடாதெனவும் கடந்த 28-ம் தேதி உத்தரவு வழங்கினார்.

ஆனால் இதுவரை அவர் பதவி விலகவில்லை. தேர்தல் மூலம் புதிய நிர்வாகக் குழுவை தேர்ந்தெடுப்பதுதான் முறையானதாக இருக்கும். இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தலை நடத்தும் முயற்சியில் இருக்கிறோம் என்றார்.

கைகலப்பு - மோதல்: அப்போது அங்கே வந்த எஸ்.ஏ.சந்திரசேகரனின் ஆதரவாளர் பாபு கணேஷ் உள்ளிட்டோர் கேயார் தரப்பினரை எதிர்த்து கோஷமிட்டனர். கேயார் ஆதரவாளர்களும் எதிர் கோஷமிட்டனர். இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு, மோதல் ஏற்பட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டி
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டி
» தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தல்: எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். போட்டி; இன்று வேட்பு மனு தாக்கல்
» எஸ்.ஏ. சந்திரசேகரன் மீது போலீஸில் கேயார் புகார்
» எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி விலக வேண்டும்: கேயார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum