தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசூல் பூக்குட்டி படத்தில் ரஜினி நடிக்கவில்லை: சௌந்தர்யா மறுப்பு

Go down

 ரசூல் பூக்குட்டி படத்தில் ரஜினி நடிக்கவில்லை: சௌந்தர்யா மறுப்பு Empty ரசூல் பூக்குட்டி படத்தில் ரஜினி நடிக்கவில்லை: சௌந்தர்யா மறுப்பு

Post  ishwarya Fri Mar 22, 2013 1:44 pm



ரசூல் பூக்குட்டி படத்தில் ரஜினி நடிக்கவில்லை என்று ரஜினியின் மகள் சௌந்தர்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.

அண்மையில் சென்னைக்கு வந்த ரசூல் பூக்குட்டி தான் இயக்கப் போகும் புதுப்படம் குறித்து ரஜினியிடம் பேசியதாகவும், அதில் இந்நி நடிகர் அமிதாப்பச்சனும் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின.

ஆனால் இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் சௌந்தர்யா. கோச்சடையான் திரைப்படம் தொடர்பாக பேசவே ரசூல் பூக்குட்டி தனது அலுவலகத்துக்கு வந்ததாகவும் மற்றப்படி வேறு எதுவும் கிடையாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து ரசூல் பூக்குட்டி கூறியதாவது: கோச்சடையான் ஒலி வடிவமைப்பு குறித்து சௌந்தர்யாவைச் சந்தித்தது உண்மைதான். ஆனால், தான் ரஜினி படத்தை இயக்கப் போவதாக வந்த செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்படி ஒரு திட்டமே இல்லை. இந்தி நடிகர் அமிதாப்பச்சனை மட்டுமே சந்தித்து என் படத்தின் கதையை கொடுத்தது உண்மை என்றார்.

ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி கோச்சடையான் திரைப்படத்தில் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரசூல் பூக்குட்டி படத்தில் ரஜினி நடிக்கவில்லை!- சௌந்தர்யா
»  இயக்குனராகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்: ரசூல் பூக்குட்டி
» படம் இயக்குகிறார் ரஹ்மான் - ரசூல் பூக்குட்டி
» ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சொந்தமாக படம் தயாரிக்கிறார்
» ரஹ்மான் – ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் வாங்கும்போது நான் வாங்க மாட்டேனா? – சரத்குமார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum