தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூன்றாவது முறையாக ஆர்யாவுடன் ஜோடி சேரும் நயன்தாரா

Go down

மூன்றாவது முறையாக ஆர்யாவுடன் ஜோடி சேரும் நயன்தாரா Empty மூன்றாவது முறையாக ஆர்யாவுடன் ஜோடி சேரும் நயன்தாரா

Post  ishwarya Fri Mar 22, 2013 1:40 pm



ஆர்யா - நயன்தாரா ஜோடி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறது.

ஏற்கெனவே பாஸ் என்கிற பாஸ்கரன் எனும் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். முதல் படத்திலேயே இவர்களது ஜோடி பேசப்பட்டதோடு மட்டுமல்லாமல் படமும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இவர்களை இரண்டாவது முறையாக ஜோடி சேர வைத்தது. 'ராஜா ராணி' திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் நடித்த போது இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு இப்போது காதலாக மாறியிருப்பதாகவும் படப்பிடிப்பில் இருவரும் தனிமையில் உட்கார்ந்து பேசுவதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் ஆர்யா - நயன்தாரா மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கின்றனர். பிரியதர்ஷன் இயக்கும் அந்தப் படத்தில் ஆர்யா தனக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்கும்படி இயக்குனரிடம் சிபாரிசு செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum