தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எஸ்.ராமகிருஷ்ணனுடன் மீண்டும் லிங்குசாமி!

Go down

எஸ்.ராமகிருஷ்ணனுடன் மீண்டும் லிங்குசாமி! Empty எஸ்.ராமகிருஷ்ணனுடன் மீண்டும் லிங்குசாமி!

Post  ishwarya Tue Mar 19, 2013 5:34 pm

விஷால், மீரா ஜாஸ்மின் நடிக்க, லிங்குசாமி இயக்கிய படம் 'சண்டக்கோழி'. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 'சண்டக்கோழி' படமும், அவற்றின் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன. லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி மற்றும் அமலா பால் நடித்த 'வேட்டை' படமும் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று இருக்கிறது. 'வேட்டை' படத்தினை தொடர்ந்து விஷால் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் லிங்குசாமி. யுவன் இசையமைக்க இருக்கிறார். இத்திரைப்படம் 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று தமிழ் திரையுலகில் செய்திகள் வலம் வந்தன. இதற்கு விஷாலின் அண்ணியான ஸ்ரேயா ரெட்டி, மற்றும் லிங்குசாமி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருமே இத்தகவலை மறுத்தனர். ஆனால் லிங்குசாமி தற்போது 'சண்டக்கோழி' இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம். விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள். 'சண்டக்கோழி' படத்திற்கு வசனம் எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன். அதற்கு பிறகு லிங்குசாமியின் அடுத்தடுத்த படங்களில் இவர் பணியாற்றவில்லை. 'சண்டக்கோழி' இரண்டாம் பாகத்திற்கு மீண்டும் எஸ்.ராமகிருஷ்ணனுடன் இணைகிறார் லிங்குசாமி என்பதுதான் ஹைலைட். 'சண்டக்கோழி' இரண்டாம் பாகத்தினை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum