தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தில் ராஜு படத்திலிருந்து பிரகாஷ் ராஜ் விலகல்

Go down

தில் ராஜு படத்திலிருந்து பிரகாஷ் ராஜ் விலகல்  Empty தில் ராஜு படத்திலிருந்து பிரகாஷ் ராஜ் விலகல்

Post  ishwarya Tue Mar 19, 2013 4:44 pm

பிரகாஷ் ராஜுக்கும் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜுக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. 'பயணம்' என்ற படத்தை தெலுங்கில் இருவரும் சேர்ந்து தயாரித்தார்கள். அடுத்து 'சீதம்மா வகிட்லோ சிருமல்லே செட்டு' என்ற தெலுங்கு படத்தை தயாரிக்கிறார் ராஜு. இதில் வெங்கடேஷ், மகேஷ் பாபு அண்ணன், தம்பியாக நடிக்கின்றனர். இரு ஹீரோக்களின் தந்தை வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்க ஒப்புக்கொண்டார். கடந்த மாதம் இறுதியில் குற்றாலத்தில் ஷூட்டிங் தொடங்கியது. ஆனால் பிரகாஷ் ராஜ் கலந்து கொள்ளவில்லை. இதற்கு காரணம் கேட்டபோது, பிரகாஷ் ராஜ், தில் ராஜு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து தில் ராஜு தயாரிக்கும் படத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்க மறுத்து வெளியேறி விட்டார். தந்தை வேடத்தில் நடிக்க புதிய நடிகரை தேடிக்கொண்டிருக்கிறது படக் குழு. ஏற்கனவே இப்படத்தில் மகேஷ் பாபுவின் அண்ணி வேடத்தில் நடிக்க மறுத்து அனுஷ்கா, த்ரிஷா போன்றவர்கள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. சாரு.. இப்பல்லாம் ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறாரு.....!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum