தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்! - ஸ்ரேயா

Go down

மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்! - ஸ்ரேயா  Empty மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்! - ஸ்ரேயா

Post  ishwarya Tue Mar 19, 2013 3:50 pm

யாருன்னே தெரியாத மலேசியா பாண்டியன் என்பவர் என் மீது வழக்கு தொடர்வதாக மிரட்டுவதா என ஆவேசப்பட்டுள்ளார் ஸ்ரேயா. மம்முட்டி, பிருதிவிராஜ், ஸ்ரேயா நடித்த 'போக்கிரி ராஜா' என்ற மலையாள படம் தமிழில் 'ராஜா போக்கிரி ராஜா' என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழில் வெளியிடுபவர் மலேசியா பாண்டியன். இந்த நிலையில், அதன் மலையாள தயாரிப்பாளரான தாமஸ் ஆண்டனி மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில், நடிகை ஸ்ரேயா ஒரு புகார் கொடுத்தார். அதில், "போக்கிரி ராஜா படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டபோதே அந்த படத்தை வேறு மொழிகளில் 'டப்' செய்யக்கூடாது" என்று ஒப்பந்தம் செய்து கொண்டேன். அந்த ஒப்பந்தத்தை தாமஸ் ஆண்டனி மீறிவிட்டார். எனவே அந்த படத்தை தமிழ் உள்பட வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று அந்த புகாரில் ஸ்ரேயா கூறியிருந்தார். இதற்கு தாமஸ் ஆன்டணி பதிலளிக்கவில்லை. ஆனால் மலேசியா பாண்டியன் என்பவர் பதில் கூறியிருந்தார். "என் படத்தை தடை செய்ய முயற்சிப்பவர்கள் மீது கோர்ட்டில் நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன்" என்று அவர் கூறியிருந்தார். மேலும் ஸ்ரேயா மீது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்)யில் மலேசியா பாண்டியன் புகார் செய்தார். இதுபற்றி நடிகை ஸ்ரேயாவிடம் கேட்டபோது, "போக்கிரி ராஜா (மலையாள) படம் தொடர்பாக எனக்கும், தாமஸ் ஆண்டனிக்கும் இடையேதான் ஒப்பந்தம் இருக்கிறது. மலேசியா பாண்டியன் யார் என்றே எனக்கு தெரியாது. அவருடன் நான் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. அப்படி தெரியாத நிலையில், என் மீது அவர் வழக்கு தொடருவதாக மிரட்டுவதா? இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்," என்றார். அப்டிப்போடு!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாரதிராஜா மிரட்டி பார்க்கிறார்! நான் பயப்பட மாட்டேன் : அமீர்!!
» மனதில் பட்டதைப் பேச நான் எவனுக்கும் பயப்பட மாட்டேன்..! – ரஜினி
» கல்யாணத்துக்கு அவசரப்பட மாட்டேன் “பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்” – ஸ்ரேயா
» அமீர் இருக்கும் மேடைக்கு நான் வர மாட்டேன் – ப்ரியாமணி
» விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!- வடிவேலு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum