பாரதிராஜாவின் 'அன்னக்கொடி'யில் ஆர்.கே.செல்வமணி!
Page 1 of 1
பாரதிராஜாவின் 'அன்னக்கொடி'யில் ஆர்.கே.செல்வமணி!
நடிக்க வரப்போகிறார் ஆர்.கே.செல்வமணி. அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? இதே அதிர்ச்சிதான் அவருக்கும் இருந்ததாம் ஆரம்பத்தில். 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' படம் துவங்கிய காலத்திலிருந்தே அதை அரைக்கம்பத்தில் பறக்க விடுகிற அளவுக்கு ஸ்டிரைக்கும் பிரச்சினைகளும் தலை தூக்கிவிட்டது. இப்படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த பார்த்திபனை திடீரென்று படத்திலிருந்தே நீக்கினார் பாரதிராஜா. நானில்லாத படம் நாசமா போக என்றுதான் சபிக்கவில்லை. மற்றபடி 'அன்னக்கொடி' பற்றி அந்தளவுக்கு நெகட்டிவ் கதிர்வீச்சு நடத்திக் கொண்டிருக்கிறார் பார்த்திபன். இந்த படத்திற்காக இவரே மெனக்கட்டு எடுத்த கெட்டப்பில் ஒரு முழு படத்தில் நடித்து முடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார். இந்த நேரத்தில்தான் அமீருக்கும் பாரதிராஜாவுக்குமே ஆகாமல் போனது. பெப்ஸி - தயாரிப்பாளர் சங்க பிரச்சினையில் எல்லா அஸ்திரங்களையும் அமீருக்கு எதிராக திருப்பிய பாரதிராஜா, இறுதியாக அவர் நடித்த காட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு கதையை முழுசாகவே மாற்றி விட்டாராம். இனி அமீர் தேவையே இல்லை என்கிற அளவுக்கு உருமாறிப் போயிருக்கிறது அ.கொ.கொ.வீரனும் படம். இந்த நிலையில்தான் தனது படத்தில் நடிக்க ஆர்.கே.செல்வமணியை அழைத்திருக்கிறார் பாரதிராஜா. நானா, நடிக்கறதா? என்றெல்லாம் முதலில் பம்மிய செல்வமணியிடம், நீ சரின்னு மட்டும் சொல்லு. மற்றதை நான் பார்த்துக்கிறேன் என்றாராம் பாரதிராஜா. வீரன இப்டி பொசுக்குனு வீசிட்டீங்களே....?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» ஆர்.கே.செல்வமணி நடிப்பதை மறைக்கும் இமயம்!
» இலங்கை அரசின் சதி - ஆர்.கே.செல்வமணி எச்சரிக்கை அறிக்கை
» கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் – இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை
» பாரதிராஜாவின் அழைப்புக்காக காத்திருக்கிறேன் : இனியா
» பாரதிராஜாவின் புதிய நாயகி!
» இலங்கை அரசின் சதி - ஆர்.கே.செல்வமணி எச்சரிக்கை அறிக்கை
» கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் – இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை
» பாரதிராஜாவின் அழைப்புக்காக காத்திருக்கிறேன் : இனியா
» பாரதிராஜாவின் புதிய நாயகி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum