'டெல்லி பெல்லி'யில் ஹன்சிகா?!
Page 1 of 1
'டெல்லி பெல்லி'யில் ஹன்சிகா?!
இந்தியில் வரவேற்பைப் பெற்ற 'டெல்லி பெல்லி'யின் தமிழ் ரீமேக்கை தயாரிக்க இருக்கிறது யுடிவி நிறுவனம். இப்படத்தில் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான யு.டிவி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. 'டெல்லி பெல்லி' படத்தினை தமிழுக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களை செய்து திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர் கண்ணன். ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டவர்களை நடிக்க வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். படத்தின் நாயகியாக ஹன்சிகாவை அணுகி இருக்கிறது யு.டிவி நிறுவனம். இது குறித்து ஹன்சிகா கூறியதாவது, "டெல்லி பெல்லி படத்தினை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கிறார்கள். 'டெல்லி பெல்லி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க என்னை அணுகி இருக்கிறார்கள். விரைவில் ஒப்பந்தமாகி விடுவேன்" என்று தெரிவித்து இருக்கிறார். பாஸ் (எ) பாஸ்கரன் படத்திலிருந்து ஆர்யா, சந்தானம் காமெடி கூட்டணிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரீமேக்குக்கு ஆள் தேடறத விட ஒரு நாறாத நல்ல டைட்டிலா தேர்ந்தெடுங்கப்பா.......
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டெல்லி பெல்லி தமிழில் சேட்டையானது
» டெல்லி பெல்லி ரீமேக் படத்தில் ஆர்யா
» டெல்லி சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்
» டெல்லி சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்
» கமல் என் ரசிகர் : டெல்லி கணேஷ்
» டெல்லி பெல்லி ரீமேக் படத்தில் ஆர்யா
» டெல்லி சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்
» டெல்லி சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்
» கமல் என் ரசிகர் : டெல்லி கணேஷ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum