தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் ஈ' பாடல் வெளியீட்டு விழா!

Go down

நான் ஈ' பாடல் வெளியீட்டு விழா!   Empty நான் ஈ' பாடல் வெளியீட்டு விழா!

Post  ishwarya Mon Mar 18, 2013 6:18 pm

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் புதிய படம் 'நான் ஈ'. இதில் நானி, சமந்தா, சந்தானம் நடிக்கின்றனர். பி.வி.பி. சினிமா சார்பில் பரம் வி.பொட்லூரி தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டனர். விழாவில் சூர்யா பேசியதாவது:- தெலுங்கில் 'மகதீரா' போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி தமிழில் 'நான் ஈ', படத்தை எடுக்கிறார். ஹாலிவுட்டில் நிறைய தொழில் நுட்பதுறைகள் உண்டு. நம்மிடம் அவ்வளவு வசதிகள் இல்லை. ஆனாலும் இருக்கும் வசதிகளை வைத்து அவர் எடுத்த படங்கள் பிரமிக்க வைத்துள்ளன. தற்போது ஈ-யை அனிமேஷனில் உருவாக்கி இந்த படத்தை எடுத்துள்ளார். இது அடுத்த தலைமுறைக்கான படமாக இருக்கும். கிராபிக்ஸ் படங்கள் எடுப்பது சவாலான விஷயம். தெலுங்கு, மலையாள திரையுலகில் தமிழ் நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மரியாதையும், வரவேற்பும் உள்ளது. தமிழ் படங்களையும் ரசித்து பார்க்கிறார்கள். இயக்குநர் ராஜமவுலி தொடர்ந்து தமிழ் படங்கள் எடுக்க வேண்டும், என்று பேசினார். நடிகர் பார்த்திபன், இயக்குநர்கள் பாலா, லிங்குசாமி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஈ பிரம்மாண்டமா பறக்கும் போல.....

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum