தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் அமிதாப்-ரஜினி சந்திப்பு!

Go down

சென்னையில் அமிதாப்-ரஜினி சந்திப்பு! Empty சென்னையில் அமிதாப்-ரஜினி சந்திப்பு!

Post  ishwarya Mon Mar 18, 2013 5:54 pm

சென்னை வந்துள்ள பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 5-வது ஐபிஎல் போட்டி தொடக்கவிழாவில் பங்கேற்க சென்னைக்கு இரு தினங்களுக்கு முன் வந்தார் அமிதாப் பச்சன். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ள அவரை, அந்த ஹோட்டலுக்கே சென்று நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த். சமீபத்தில்தான் வயிற்று வலிக்காக அமிதாப்புக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அவரை நலம் விசாரித்து, மரியாதை செய்யும் விதமாக ரஜினி இந்த சந்திப்பை மேற்கொண்டார். இதுகுறித்து அமிதாப் தனது ட்விட்டரில், "ரஜினி இன்று என்னைப் பார்க்க ஹோட்டலுக்கு வந்திருந்தார். அவர் உடல்நலம் குணமடைந்து விட்டது தெரிந்தது. கடவுளுக்கு நன்றி. அவருடன் நேரத்தைச் செலவிடுவது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம் (Rajini pays me a visit in my room! Looks recovered from his recent illness. Thank God! Always a delight to spend time with him!), என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட போது, அவர் மீது மிகுந்த அக்கறை காட்டிய அமிதாப், அவரை சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்குமாறு பரிந்துரைத்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது நினைவிருக்கலாம். ஈகோயில்லாத இவுங்க பிணைப்ப பார்த்தா பிரமிப்பாயிருக்கு......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு – உரிய சூழல் அமையும் வரை காத்திருக்க அறிவுரை!
» ஜெவுடன் ரஜினி சந்திப்பு – மகள் நிச்சயதார்த்தத்துக்கு அழைப்பு!
» திடீர் சந்திப்பு… நயன்தாராவுக்கு ரஜினி அட்வைஸ்?
» நீண்ட இடைவெளிக்குபின் ரஜினி-ஸ்ரீதேவி சந்திப்பு
» அமிதாப் என் குரு… ரோல் மாடல்! – ரஜினி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum