தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆர்.கே.செல்வமணி நடிப்பதை மறைக்கும் இமயம்!

Go down

ஆர்.கே.செல்வமணி நடிப்பதை மறைக்கும் இமயம்! Empty ஆர்.கே.செல்வமணி நடிப்பதை மறைக்கும் இமயம்!

Post  ishwarya Mon Mar 18, 2013 4:41 pm

தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஆர்.கே.செல்வமணிக்கு காதும் காதும் வைத்தமாதிரி தேனியில் ஸ்கீரின் டெஸ்ட் எடுத்திருக்கிறாராம் பாரதிராஜா. அமீர் கதாபாத்திரத்தை திரைக்கதையில் கொஞ்சம் குறைத்து, அதில் ஆர்.கே. செல்வமணியை நடிக்க வைக்கும் முயற்சியில் தீவிரமாக இருகிறாராம் அவர். ஸ்கீரின் டெஸ்ட் எடுக்க ஒரு முழுக்காட்சியையும் செல்வமணியை வைத்து எடுத்து எடிட் செய்து பார்த்ததோடு, தனது உதவியாளர்களிடமும் கருத்துக் கேட்டிருக்கிறார் பாரதிராஜா. ஆனால் ஒருவர்கூட ஓகே சொல்லவில்லையாம். என்றாலும் பாரதிராஜா, செல்வமணியை விடுகிற மாதிரி இல்லை என்கிறார்கள். அதேநேரம் ஆர்.கே.செல்வமணிக்கு ஸ்கீரின் டெஸ்ட் எடுத்த விவகாரம் மீடியாவுக்கு கசிந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கடுமையாக உதவி இயக்குநர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம். இதற்கிடையில் செல்வமணியின் மனைவியும் ஆந்திர அரசியலை கலக்கிவிட்டு ஓய்ந்தவருமான ரோஜாவை இந்தப்படத்தில் கார்த்திகாவுக்கு அம்மாவாக நடிக்க அழைத்து இருக்கிறார் பாரதிராஜா. அறிமுக நாயகன் லட்சுமணன்- கார்த்திகா ஜோடியின் கதையை தற்போது திரைக்கதையில் அதிகப்படுத்தி விட்டாரம் இயக்குநர். தற்போது தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் படப்பிடிப்பை நடத்தி வரும் பாரதிராஜா, 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' படத்துக்கு இதுவரை மூன்று பாடல்களை ஜீ.வி.பிரகாஷிடம் கேட்டு வாங்கியிருக்கிறார் என்கிறார்கள் படப்பிடிப்புக் களத்தில் இருந்து. இனிய தமிழ் மக்களே... கொடிய என்ன பாடு படுத்துறாருனு பாருங்க... நீங்களே என்னனுதான் கேளுங்கப்பா.....

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum