தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீர்ப்பறவையில் 'அழகி'!

Go down

நீர்ப்பறவையில் 'அழகி'!  Empty நீர்ப்பறவையில் 'அழகி'!

Post  ishwarya Mon Mar 18, 2013 2:18 pm

பல்வேறு படங்களில் நடித்து வரும் நடிகைகள் மத்தியில் தனது மனதிற்கு பிடித்த பாத்திரத்தில் மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கை பிடிப்பு உள்ளவர் நந்திதா தாஸ். தங்கர் பச்சான் இயக்கத்தில் 'அழகி', மணிரத்னம் இயக்கத்தில் 'கன்னத்தில் முத்தமிட்டால்' போன்ற தமிழ் படங்களில் நடித்தார். அதற்கு பிறகு நந்திதா தாஸ் எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'நீர்ப்பறவை' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகி இருக்கிறார் நந்திதா தாஸ். பெங்களூரில் சீனு ராமசாமி நந்திதா தாஸை சந்தித்து 'நீர்ப்பறவை' படத்தில் அவரது பாத்திர படைப்பை பற்றி விளக்கமாக கூறி இருக்கிறார். கதையை கேட்டு நெகிழ்ந்த நந்திதா தாஸ் உடனே ஒ.கே. கூறிவிட்டாராம். தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பில் மே மாதம் முதல் நந்திதா தாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. விஷ்ணு, சுனைனா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் 'நீர்ப்பறவை' படத்தில் நடித்து வருகிறார்கள். ரகுநந்தன் இசையமைக்க வைரமுத்து பாடல்களை எழுதி இருக்கிறார். படப்பிடிப்பு தற்போது திருச்செந்தூரைச் சுற்றியுள்ள கடலோர கிராமங்களில் நடைபெற்று வருகிறது. அழகிய தேவதை கடல்ல நீந்த தயாராயிட்டாங்க போல........

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum