தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படு கவர்ச்சியில் 'அஞ்சலி'; குமுறும் கோடம்பாக்கம்!

Go down

படு கவர்ச்சியில் 'அஞ்சலி'; குமுறும் கோடம்பாக்கம்! Empty படு கவர்ச்சியில் 'அஞ்சலி'; குமுறும் கோடம்பாக்கம்!

Post  ishwarya Mon Mar 18, 2013 2:08 pm

சுந்தர்.சி, இயக்கத்தில் 'மசாலா கஃபே' என்ற தலைப்பில் உருவாகி வந்த படத்தின் தலைப்பு தற்போது 'கலகலப்பு' என்று மாற்றப்பட்டுள்ளது. அஞ்சலி, ஓவியா, சந்தானம், சிவா, விமல் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் சுந்தர்.சி, இயக்கும் 25-வது படமாகும். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை, பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இப்படத்திற்கு 'கண்டேன்' படத்திற்கு இசையமைத்த விஜய் எபினேசர் இசையமைத்திருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் அஞ்சலியும், ஓவியாவும் இதுவரை நடிக்காத அளவுக்கு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்கள். சுந்தர்.சி படம் என்றாலே கவர்ச்சிக்கும், காமெடிக்கும் பஞ்சம் இருக்காது என்றாலும், இதுவரை கவர்ச்சியாக நடிக்காத அஞ்சலியை இப்படி கவர்ச்சியாக நடிக்க வைத்திருக்கிறாரே அது எப்படி முடிந்தது? என்று கோடம்பாக்கமே குமுறுகிறது என்று தகவல்கள் தெரிவித்தது. 'கலகலப்பு' பாடல் வெளியீட்டு விழாவில், சுந்தர்.சியிடம் இதே கேள்வியை நிருபர் ஒருவர் கேட்க, "படத்திற்கு தேவைப்பட்டதால் தான் இப்படி நடித்திருக்கிறார்கள். முதலிலேயே நான் அஞ்சலியிடமும், ஓவியாவிடமும் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று கூறினேன். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். அதற்கான உடைகளையும் அவர்களே தேர்வு செய்து கொண்டார்கள். என் படத்தில்தான் இப்படி கவர்ச்சியாக நடித்திருக்கிறார்கள் என்பது கிடையாது. மற்ற இயக்குநர்கள் அவர்களிடம் கேட்டு இருக்க மாட்டார்கள். நான் இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்கும் போது எந்த எந்த நடிகர்களை மனதில் வைத்து கதாபாத்திரங்களை வடிவமைத்தேனோ அந்த நடிகர்கள் எனக்கு கிடைத்திருக்கிறார்கள். முழு மன திருப்தியுடன் இந்த படத்தை இயக்கினேன். படம் பார்ப்பவர்களும் நல்ல கலகலப்பாக இருப்பார்கள்." இவ்வாறு சுந்தர்.சி கூறினார். அஞ்சலியிடம் கவர்ச்சியாக நடித்தது பற்றி கேட்கும் போது, "அழகாக காட்டுவது தான் கவர்ச்சி. சுந்தர் சார், மீனா போன்ற நடிகைகளை வைத்து இயக்கும் போது அவர்களும் இது போன்ற கவர்ச்சி வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஒரு பாடல் காட்சியில் இது போல நடிக்க வேண்டி இருந்ததால் நடித்தேன். இந்த படத்தில் என்னை மிகவும் அழகாகவும், கலர்புல் நாயகியாகவும் காண்பித்திருக்கிறார்கள்." என்று அஞ்சலி கூறினார். யுடிவி மோசன் பிக்சர்ஸ் நிறுவனமும், அவ்னி சினிமேக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் வரும் மே மாதம் 11-ம் தேதியன்று வெளியாகிறது. இந்த கஃபே-ல கேட்டாத்தான் சூடா காஃபி கிடைக்கும்.. இல்லனா கோல்ட் காஃபிதான்......!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum