தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறார் உதயநிதி!

Go down

ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறார் உதயநிதி!  Empty ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறார் உதயநிதி!

Post  ishwarya Mon Mar 18, 2013 2:02 pm

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்த உதயநிதி, தனது 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குப் பிறகு கோடம்பாக்க வசூல் நாயகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இதனால் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்பவர்களிடம், தற்போது அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ஆனால், அடுத்த ஆண்டு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப் போவதாக கூறியிருக்கிறார். மதுரையில் தனது 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் ஓடும் தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்த உதயநிதி, செய்தியாளர்களையும் சந்தித்தபோது, அரசியல் தொடர்பான செய்திகள் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த உதயநிதி, "என் குடும்பமும் அரசியலும் வேறல்ல. அதனால் இப்படிக் கேட்கிறீர்கள். ஆனால் எனக்கு இப்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. என்னிடம் சினிமா பற்றி மட்டுமே கேளுங்கள். அரசியல் பற்றி எதுவும் கேட்க வேண்டாம். என் தாத்தா, அப்பா ஆகியோர் கட்சியில் இருப்பதாலும், அப்பா இளைஞரணி பொறுப்பில் இருப்பதாலும் நானும் கட்சியின் இளைஞரணிக்கு முக்கிய பதவிக்கு வருவேன் என்று பத்திரிகைகள் தான் எழுதுகின்றன. ஆனால், கட்சியில் உழைத்தவர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்களுக்கு பொறுப்புகள் தரப்பட வேண்டும். இன்னும் 5 ஆண்டுகளுக்கு சினிமா தயாரிப்பில் தான் கவனம் செலுத்துவேன். பின்னால் நடப்பதைப் பற்றி இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது. பொருத்தமான கதைகள் வந்தால்தான் நடிப்பேன். அடுத்து நான் சொந்தமாக தயாரிக்கும் படத்தில் தான் நடிக்க இருக்கிறேன். மதுரையில் என் பெயரைப் போட்டு ரசிகர் மன்றம் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் இளம்புயல் என்று வேறு போட்டிருந்தார்கள். அது ஜெயம் ரவிக்கு உரிய டைட்டில். ஆனால், இதுவரை என் பெயரில் ரசிகர் மன்றம் என்று யாருக்கும் நான் அங்கீகரம் கொடுக்கவில்லை. ஆனால், அடுத்த படத்தில் அல்லது அடுத்த ஆண்டு ரசிகர் மன்றம் குறித்து அறிவிப்பேன்." என்றார். அடேங்கப்பா... ஒத்த கல்லுல எம்மாம் பெரிய 'கண்ணாடி'ய நொறுக்கிட்டாரு.......!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இப்போதைக்கு நோ பாலிடிக்ஸ்… ஆனா ரசிகர் மன்றம் உண்டு! – உதயநிதி
» இலியானாவுக்கும் ரசிகர் மன்றம் வந்தாச்சு – மதுரையில்
»  நடிகர்கள் ஜெய், சத்யன் வீடுகளில் முற்றுகை: சிவாஜி ரசிகர் மன்றம் அறிவிப்பு
» மங்கையர் மன்றம்: அம்பிகாவிற்கு பதில் யுவராணி?
» பிறந்த நாள் கொண்டாட்டம்: ரசிகர்களுக்கு அஜீத் மன்றம் எச்சரிக்கை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum