தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அரை இறுதியில் சானியா ஜோடி தகுதி

Go down

அரை இறுதியில் சானியா ஜோடி தகுதி Empty அரை இறுதியில் சானியா ஜோடி தகுதி

Post  meenu Mon Mar 18, 2013 12:23 pm

துபாய் : துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்தியாவின் சானியா மிர்சா , எலினா வெஸ்னினா (ரஷ்யா) ஜோடி தகுதி பெற்றது. கால் இறுதியில் மார்டினஸ் சான்செஸ் , ஷாகர் பியர் ஜோடியுடன் நேற்று மோதிய சானியா ஜோடி 6,1, 4,6, 10,8 என்ற செட் கணக்கில் போராடி வென்றது. ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் ஜெலினா ஜன்கோவிச் (செர்பியா) 6,4, 6,2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை எளிதில் வீழ்த்தினார்.

மற்றொரு கால் இறுதியில் அக்னியஸ்கா ரட்வன்ஸ்கா (போலந்து) 6,2, 6,1 என்ற நேர் செட்களில் சேபைன் லிசிக்கியை (ஜெர்மனி) வென்றார். நட்சத்திர வீராங்கனை அனா இவானோவிச் (செர்பியா) 2வது சுற்றில் 6,2, 7,6 (7,4) என்ற கணக்கில் ரஷ்யாவின் மரியா கிரிலென்கோவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum