தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திய வீரரை புகழ்ந்து தள்ளும் இலங்கை வீரர்?

Go down

இந்திய வீரரை புகழ்ந்து தள்ளும் இலங்கை வீரர்? Empty இந்திய வீரரை புகழ்ந்து தள்ளும் இலங்கை வீரர்?

Post  meenu Sun Mar 17, 2013 1:32 pm


0


இளம் கிரிக்கெட் பேட்ஸ்மென்களில் கோலியின் ஆட்டம் பிரமிக்கத் தக்கதாக உள்ளது. நான் பார்த்த இளம் வீரர்களில் தற்போது கோலியே சிறந்த வீரர் என்று இலங்கையின் அதிரடி துவக்க வீரர் தில்ஷான் புகழாரம் சூட்டியுள்ளார்.

இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் கோலியை வீழ்த்த தனியாகத் திட்டமிடவேண்டும் என்று கூறினார் தில்ஷான்.

“இந்தியாவை முதல் சுற்றில் சந்திக்கவில்லை. நாங்கள் இந்தியாவை எதிர்கொள்ளவேண்டுமென்றால் அது சூப்பர் 8 சுற்றாக இருக்கலாம் அல்லது அரையிறுதியாக இருக்கலாம் அப்போது கோலிக்கு எதிராக திட்டமிடுதல் அவசியம்.

அவர் உணமையில் சிறப்பாக விளையாடுகிறார். கடந்த மாதம் மட்டுமல்ல 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் முதலே அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். நிறைய ரன்களைக் குவிக்கிறார் சிறந்த பார்மில் உள்ளார். நான் பார்த்ததிலே உலகின் தலைசிறந்த இளம் பேட்ஸ்மென் என்றால் அது கோலிதான்.

என்னைப்பொறுத்தவரை அவர் இதுபோன்று தொடர்ந்து விளையாடினால் அவரை வீழ்த்துவது கடினம்.

சமீப தொடரில் அவருக்கு எதிராக திட்டமிட்டோம் ஆனால் பயனில்லை. இருபது ஓவர் கிரிக்கெட் வித்தியாசமானது என்றாலும் அவர் தற்போது அபாரமாக விளையாடி வருகிறார்” என்றார் தில்ஷான்.

கோலி இதுவரை 90 ஒருநாள் போட்டிகளில் 3,886 ரன்களை 51.81 என்ற சராசரியில் பெற்று வருகிறார். உலகிலேயே வெகு விரைவில் 13 ஒருநாள் சதங்களை எடுத்த வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக் காரர் கோலிதான்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum