தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு: விஸ்வரூபம் படம் விரைவில் வெளியாகிறது

Go down

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு: விஸ்வரூபம் படம் விரைவில் வெளியாகிறது Empty முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு: விஸ்வரூபம் படம் விரைவில் வெளியாகிறது

Post  ishwarya Sat Mar 16, 2013 5:14 pm

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து விஸ்வரூபம் தமிழகத்தில் விரைவில் திரையிட இருக்கிறது.

கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. முதல்- அமைச்சர் ஜெயலலிதா, முஸ்லிம் அமைப்பினரும் கமலஹாசனும் விஸ்வரூபம் பட விவகாரத்தில் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண அரசு உதவும் என அறிவித்தார்.

இதையடுத்து சென்னை கோட்டையில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கமலஹாசன் பேச்சுவார்த்தையில் பங்கேற்காததற்கு முஸ்லிம் அமைப்பினர் அதிருப்தி வெளியிட்டனர். அவரிடம்தான் பேசுவோம் என கூறினர். இதைத் தொடர்ந்து கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

கமல் மும்பையில் இருந்து இன்று மதியம் சென்னை திரும்பினார். மாலை 3 மணியளவில் கோட்டைக்கு சென்று உள்துறை செயலாளரை சந்தித்தார். இதையடுத்து மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 24 முஸ்லிம் அமைப்புகளைச்சேர்ந்த பிரதிநிதிகள், தவ்ஹீத் ஜமாஅத் பிரதிநிதிகள், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உள்துறை செயலாளர் ராஜகோபால் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சுமார் 6 மணி நேரம் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதனால் விஸ்வரூபம் படம் விரைவில் தமிழகத்தில் வெளியாக உள்ளது.

பேச்சுவார்த்தை முடிந்தபின் கமலஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்த முதல் அமைச்சருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று விடுமுறை என்றாலும் சுமார் 6 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உள்துறை செயலருக்கும் நன்றி.

விஸ்வரூபம் படம் சம்பந்தமாக தொடரபட்ட ரிட் மனு பின்வாங்கப்படும். கூட்டத்தில் முஸ்லிம் அமைப்பினர் சில காட்சிகளை நீக்க சொன்னார்கள். நான் தொழில்நுட்ப பிரச்சினைகளை பற்றி கூறினேன். இறுதில் சில காட்சிகளில் ஒலியை நீக்குவதற்கு ஒப்புக்கொண்டதால் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

இதனால் அரசு படத்திற்கான தடையை நீக்கும் என்று நம்புகிறேன். மேலும், படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum