தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாரா மறுத்ததால் ஷாருக்கான் படத்தில் பிரியாமணி குத்தாட்டம்

Go down

நயன்தாரா மறுத்ததால் ஷாருக்கான் படத்தில் பிரியாமணி குத்தாட்டம் Empty நயன்தாரா மறுத்ததால் ஷாருக்கான் படத்தில் பிரியாமணி குத்தாட்டம்

Post  ishwarya Sat Mar 16, 2013 5:02 pm

ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்க 'சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் இந்திப் படம் தயாராகி வருகிறது. ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இதில் சத்யராஜ், மனோரமா உள்ளிட்ட தமிழ் நடிகர், நடிகைகள் பலர் நடிக்க உள்ளனர்.

மும்பையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ரெயிலில் செல்லும் இளைஞனை சுற்றி நடக்கும் சம்பவங்களே கதை. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம்ஆட நயன்தாராவிடம் கேட்டனர். இதற்கு பெரும் தொகை சம்பளமாக தருவதாகவும் கூறினர். ஆனால் நயன்தாரா மறுத்துவிட்டார்.

இதையடுத்து சமந்தாவிடம் பேசினர். அவருக்கும் இதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. தற்போது பிரியாமணியை அழைத்துள்ளனர். அவர் ஆட சம்மதித்து விட்டாராம்.

இதுகுறித்து பிரியாமணியிடம் கேட்டபோது, ஒரு பாடலுக்கு ஆடுவதால் தவறு இல்லை. ஷாருக்கான் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவதன் மூலம் அவரை அருகில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்து உள்ளது. பிரபல நடிகர்கள் மற்றும் பெரிய கம்பெனி படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடுவேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum