தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'விஸ்வரூபம்' நாளை மறுநாள் ரிலீஸ்: தியேட்டர்களில் இன்று முன்பதிவு துவங்கியது

Go down

'விஸ்வரூபம்' நாளை மறுநாள் ரிலீஸ்: தியேட்டர்களில் இன்று முன்பதிவு துவங்கியது Empty 'விஸ்வரூபம்' நாளை மறுநாள் ரிலீஸ்: தியேட்டர்களில் இன்று முன்பதிவு துவங்கியது

Post  ishwarya Sat Mar 16, 2013 4:56 pm

கமல் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படம் பல தடங்கல்களை கடந்து நாளை மறுநாள் (7-ந்தேதி) ரிலீசாகிறது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 'விஸ்வரூபம்' திரையிடப்படுகிறது.

ஏற்கனவே 'கடல்', 'டேவிட்' படங்கள் ஓடும் பல தியேட்டர்கள் 'விஸ்வரூபம்' படத்துக்கு ஒதுக்கி கொடுக்கப்படுகின்றன. சென்னையில் சத்யம், சாந்தம், தேவி, சாந்தி, உட்லண்ட்ஸ், எஸ்கேப், அபிராமி, ஸ்வர்ணசக்தி, சங்கம், உதயம், மினி உதயம், ஏ.ஜி.எஸ்., கமலா, பைலட், மோட்சம், சைதை ராஜ், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம், பெரம்பூர் எஸ்.2, பாரத், ஸ்ரீபிருந்தா, மகாராணி, எம்.எம். தியேட்டர், மாயாஜால், பிரார்த்தனா, ரோகிணி, திருவான்மியூர் எஸ்.2, கணபதிராம், வெற்றி, கொளத்தூர் கங்கா, மூலக்கடை சண்முகா, ராக்கி, முருகன், பூந்தமல்லி சுந்தர் போன்ற தியேட்டர்களில் 'விஸ்வரூபம்' திரையிடப்படுகிறது.

டிக்கெட் முன்பதிவுகள் இன்று துவங்கின. அதிகாலையிலேயே ஏராளமான ரசிகர்கள் தியேட்டர்களில் திரண்டனர். போலீசாரும், தியேட்டர் ஊழியர்களும் கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தி வரிசையில் நிற்க வைத்தனர்.

முன்பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே பல தியேட்டர்களில் ஒருவாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. தியேட்டர்களில் கமல் ரசிகர்கள் கொடி - தோரணம் கட்டி இருந்தனர். கமலின் கட்-அவுட்களும் வைத்து இருந்தார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் நாளை மறுநாள் ரிலீஸ்: கமல்ஹாசன் அறிவிப்பு
» நாளை தியேட்டர்களில்,இன்று தெருக்களில்...! விஸ்வரூபம் சினிமாவிற்கு ஏற்பட்டுள்ள கதி!
» ‘விஸ்வரூபம்’ வெளியாகும் தியேட்டர்களில் இன்று 'கடல்', 'டேவிட்' படங்கள் ரிலீஸ்: கமலுக்கு மேலும் ஒரு சிக்கல்
» விஸ்வரூபம் வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழக தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு
» கர்ணன், குடியிருந்தகோயில் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum