தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய் சேதுபதி நடிக்கும் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’

Go down

விஜய் சேதுபதி நடிக்கும் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ Empty விஜய் சேதுபதி நடிக்கும் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’

Post  ishwarya Sat Mar 16, 2013 3:55 pm

தென்மேற்கு பருவக்காற்று‘ படத்தின் மூலம் கதாநாயகன அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து 'சுந்தரபாண்டியன்', 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரின் பாராட்டையும், ஆதரவையும் பெற்றார்.

தற்போது 3 படங்களை தன் கைவசம் வைத்திருக்கும் விஜய் சேதுபதி அடுத்து, ஜீவா நடிப்பில் வெளியான ‘ரௌத்திரம்’ படத்தின் டைரக்டர் ‌கோகுல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்று பெயர் வைத்துள்ளனர்.

விஜய்சேதுபதி ஜோடியாக 'சுப்ரமணியபுரம்' ஸ்வாதியும், 'அட்டக்கத்தி' நந்திதாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பரோட்டா சூரியும் முக்கிய ரோலில் நடிக்கிறார். மதன்கார்கி இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum