தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் சினிமா பற்றி கருத்து: பாரதிராஜா ஆவேசத்தால் காஜல் அகர்வால் அதிர்ச்சி

Go down

தமிழ் சினிமா பற்றி கருத்து: பாரதிராஜா ஆவேசத்தால் காஜல் அகர்வால் அதிர்ச்சி Empty தமிழ் சினிமா பற்றி கருத்து: பாரதிராஜா ஆவேசத்தால் காஜல் அகர்வால் அதிர்ச்சி

Post  ishwarya Sat Mar 16, 2013 2:17 pm

பாரதிராஜா தன்னைப் பற்றி ஆவேசமாக கூறியதால் நடிகை காஜல்அகர்வால் அதிர்ச்சி அடைந்தார்.

டைரக்டர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானவர் நடிகை காஜல்அகர்வால். தொடர்ந்து நான் மகான் அல்ல, துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

சமீபத்தில் காஜல் அகர்வால் அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவில் பெண்களுக்கு மரியாதை இல்லை. கதாநாயகர்களைத்தான் கடவுளாக நினைக்கிறார்கள். ஆனால் தெலுங்கில் பெண்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது என்றார்.

அவரது கருத்து தமிழ் சினிமா உலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நான் அப்படி சொல்லவில்லை என்று காஜல்அகர்வால் மறுத்தார்.

இதற்கிடையே டைரக்டர் பாரதிராஜா, காஜல் அகர்வாலுக்கு கண்டனம் தெரிவித்தார். காஜல் அகர்வால் திமிர்பிடித்தவர், அவரை அறிமுகப்படுத்தியதற்காக வருத்தமும் வேதனையும் படுகிறேன் என்றார்.

தனது பேச்சு குறித்து மற்றவர்கள் கண்டனம் தெரிவித்தபோது அதை காஜல்அகர்வால் கண்டு கொள்ளவில்லை. ஆனால் பாரதிராஜா கடுமையாக திட்டியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தான் அப்படி பேசவில்லை, பேட்டியை திரித்து வெளியிட்டுவிட்டார்கள் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டார்.

மேலும் பாரதிராஜாவிடம் பேசி விளக்கம் அளிக்க முயன்றார். ஆனால் பாரதிராஜா பேச மறுத்துவிட்டார். இதனால் காஜல் அகர்வால் மேலும் வருத்தம் அடைந்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum