தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படப்பிடிப்பில் படகு கவிழ்ந்து விபத்து: மயிரிழையில் உயிர் தப்பினார் தனுஷ்

Go down

படப்பிடிப்பில் படகு கவிழ்ந்து விபத்து: மயிரிழையில் உயிர் தப்பினார் தனுஷ் Empty படப்பிடிப்பில் படகு கவிழ்ந்து விபத்து: மயிரிழையில் உயிர் தப்பினார் தனுஷ்

Post  ishwarya Sat Mar 16, 2013 2:15 pm

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘மரியான்’. இப்படம் முழுக்க முழுக்க கடலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. தனுஷ் இதில் மீனவராக நடிக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்காக, கடலுக்குள் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டார் இயக்குனர் பரத்பாலா. அதன்படி, ஒரு படகில் தனுஷ், அப்புக்குடி இருவரையும் அமர்த்தி கடலுக்குள் சென்று படமாக்கினார். அப்போது அவர்கள் அமர்ந்திருந்த படகு தீடிரென வீசிய பலத்த காற்றால் தலைகீழாக கவிழ்ந்தது. பாதுகாப்புக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து இருவரையும் காப்பாற்றினார். இந்த எதிர்பாராத விபத்தால் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமானது. இந்த விபத்தால் யாருக்கும் பெரிதளவில் காயம் ஏற்படவில்லை.

மரியானுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரஹ்மான் இசையில் தனுஷ் நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதியிலிருந்து திரும்பும்போது கார் கவிழ்ந்து விபத்து – மனோரமா காயம்
» கார், லாரி விபத்தில் நடிகை உமாரியாஸ் உயிர் தப்பினார்
»  குடிபோதையில் பெண் ஓட்டிய கார் நடிகர் சந்தீப் மீது மோதியது: அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்
»  குடிபோதையில் பெண் ஓட்டிய கார் நடிகர் சந்தீப் மீது மோதியது: அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்
» அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார் வித்யாபாலன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum