தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி

Go down

மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி Empty மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி

Post  ishwarya Sat Mar 16, 2013 1:53 pm


அடுத்தடுத்து ஆறு படங்களை தொடர்ந்து வெற்றிப்படமாக கொடுத்த இயக்குனர் எம்.ராஜா. முக்கியமாக இவர் தன்னுடைய தம்பியான நடிகர் ‘ஜெயம்’ ரவியுடன் இணைந்து பணியாற்றிய ‘ஜெயம்’, எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தில்லாலங்கடி’ ஆகிய ஐந்து படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது. இந்த வெற்றிக் கூட்டணி தற்போது மீண்டும் இணையவிருக்கிறது.

காதல், செண்டிமென்ட் என கலக்கியிருக்கும் இந்த கூட்டணி தற்போது முதன்முறையாக ஆக்ஷனில் களமிறங்குகிறது. இதுகுறித்து ‘ஜெயம்’ ராஜா கூறும்போது, ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்காக ஜெயம் ரவியும் நானும் மீண்டும் கரம் கோர்க்கிறோம். இது உண்மைதான். இது ஒரு ஆக்ஷன் படம். ஆனால் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே கதை நகரும்.

ஆக்ஷன் வகை திரைபடங்களில் இதுவரை அமைத்திராத புத்தம் புது கோணங்களில் காட்சிகளை அமைக்கப் போகிறோம். அந்த வகையில் இந்த படம் ஆக்ஷன் படங்களில் புதிய எல்லையைத் தொடும். அதற்கு துணையாக திரைக்கதை இருக்கும் என்று கூறினார்.

தற்போது இந்த படத்தின் பிற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு பணி நடந்து கொண்டிருக்கிறது. வரும் மே மாதம் படப்பிடிப்பை துவங்க இருக்கின்றனர். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

‘ஜெயம்’ ராஜா கடைசியாக விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil matrimony_INNER_468x60.gif

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum